ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பதின் அறிகுறி
ஜோதிட சாஸ்திரங்களின் படி, ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய தனி ராசி மற்றும் பலன்கள் இருக்கிறது.அந்த நிலையில் ஏதேனும் ஒரு கிரகத்தின் நிலை மோசமாகிவிட்டால்,அந்த கிரகத்திற்குரிய ராசிக்காரர்கள் உடல் உபாதைகள் மற்றும் வாழ்க்கை சம்பந்தமான பிரச்னையை சந்திக்க கூடும்.
அதேபோல், ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயின் நிலை மோசமாக இருந்தால்,திருமண தோஷம் அல்லது செவ்வாய் தோஷம் என்று சொல்லுவார்கள்.அவ்வாறு செவ்வாய் தோஷம் இருந்தால் வாழ்க்கை மிகுந்த போராட்டம் பிறகே ஜெயிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
அப்படியாக செவ்வாய், கிரகங்களின் தளபதியாகவும் பூமியின் மகனாகவும் கருதப்படுகிறது. ஜாதகத்தில் செவ்வாயின் நிலை மோசமாக இருந்தால்,ஒருவருக்கு பல விதமான பிரச்சனைகள் உண்டாகி வாழ்க்கையை வெறுத்து நிற்கும் நிலை ஏற்படும்.
அவ்வாறு ஒருவருக்கு செவ்வாய் தோஷம் உண்டானால் ஏற்படும் அறிகுறியை பற்றி பார்ப்போம்.
- ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் அந்த நபர் மிகுந்த கோபக்காராக இருப்பார்.
- ஜாதகத்தில் செவ்வாய் பன்னிரண்டாம் வீட்டில் இருக்கும்போது,அவர்கள் திருமண வாழ்க்கையில் பிரச்னை ஏற்படும்.
- மேலும்,செவ்வாய் தோஷம் இருப்பதால் அவர்களுக்கு குழந்தை பிறப்பதில் சிரமம் உண்டாகலாம்.
- செவ்வாய் தோஷம் இருப்பவர்களின் சகோதர சகோதிரியிடம் இடைவிடாத பிரச்சனை இருக்கும்.
- செவ்வாய் தோஷம் இருந்தால் தேவை இல்லாத வழக்குகளில் மாட்டிக்கொண்டு நீதிமன்றம் அலையும் வாய்ப்புகள் உண்டு.
- செவ்வாய் எட்டாம் வீட்டில் இருந்தால் தாம்பத்திய வாழ்க்கையில் கசப்பு ஏற்படும்.
பரிகாரங்கள்
- ஜோதிட சாஸ்திரப்படி, ஜாதகத்தில் செவ்வாயின் நிலை மோசமாக இருந்தால் அவர்கள் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனை வழிபடுவது நன்மை தரும்.
- செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் நேரம் கிடைக்கும் பொழுது அனுமான் மந்திரங்களை தவறாமல் பாராயணம் செய்யும் போது செவ்வாய் தோஷத்திலிருந்து விடுபடலாம்.
- செவ்வாய் தோஷத்தின் தீமைகளை குறைக்க, ஒரு சிவப்பு துணியில் சிறிது பெருஞ்சீரகம் கட்டி உங்கள் படுக்கையறையில் எங்கேனும் வைக்கலாம்.
- மேலும் தானம் செய்வதால் செவ்வாய் பாதிப்பு குறையும்.அதிலும் கோதுமை, சிவப்பு நிற ஆடைகள், வெல்லம், தாமிரம், நெய், சர்க்கரை, பருப்பு போன்றவற்றை தானம் செய்ய வேண்டும்.
- செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபட, 10 செவ்வாய் கிழமை விரதம் இருந்து விரதத்தின் போது உப்பு எடுக்காமல் சாப்பிடுவதால் அதன் தாக்கம் குறையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |