வீட்டில் தீய சக்திகள் இருப்பதற்கான 5 அறிகுறிகள்
உலகத்தில் எல்லாம் இரண்டு தான்.ஆண் பெண்,இன்பம் துன்பம்,வரவு செலவு,நேர்மறை எதிர்மறை என்று ஒன்று இருந்தால் அதற்கு எதிராக இன்னொன்று இருக்கும்.அந்த வகையில் எல்லோரும் நேர்மறை விஷயங்களை தான் விரும்புவார்கள்.
எதிர்மறை செயல்கள் ஒரு மனைதை சங்கடத்திற்கு தள்ளிவிடும்.மேலும்,இந்த நேர்மறை எண்ணங்கள் தான் ஒரு மனிதனின் வளர்ச்சியை மென்மேலும் அதிகப்படுத்தும்.அப்படியாக ஒருவர் வீட்டில் அதிக அளவில் நேர்மறை எண்ணம் சூழ வேண்டும்.இல்லை என்றால் அது அவர்களை துன்பத்திற்குள் மூழ்கிவிடும்.
ஆனால் ஒருவர் வீட்டில் எதிர்மறை எண்ணங்களால் சூழ படுகிறது என்பதை எவ்வாறு உணர்வது அதில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என்பதை பற்றி பார்ப்போம்.
1.எதிர்மறை வீட்டில் இருந்தால் அது நம்மை எந்த செயலையும் சரியாக செய்யவிடாமல் தடுத்து கொண்டு இருக்கும்.அதாவது எப்பொழுதும் குடும்ப உறுப்பினர்கள் மந்த நிலையில்,மனம் குழப்பத்தில் இருந்து தெளிவான முடிவு எடுக்க முடியாத சூழலுக்கு தள்ளி விடும்.
2.முக்கிய அறிகுறியாக நாம் நட்டுவைத்த மரம் செடி கொடிகள் என்று எதுவும் சரியாக வளராமல் காய்ந்து போயிவிடும்.
3.தேவை இல்லாத சண்டைகள்,வாக்குவாதம் நிம்மதியின்மை நிலவும்.என்னதான் அவர்கள் சாந்தமாக இருக்க முயற்சி செய்தாலும் அது அவர்களை அடுத்த அடுத்த சண்டைக்கு கொண்டு செல்லும்.
4.மேலும்,வீட்டில் திடீர் உடல் நல குறைவு.பண கஷ்டம் நஷ்டம் இழப்புகள் போன்ற சூழல் உருவாகும்.
5.வீட்டில் செல்ல பிராணிகள் இருந்தால் தேவை இல்லாமல் அழுவது சத்தம் இடுவது போன்ற சம்பம் நடக்கும்.
ஆக இவ்வாறான சூழல் திடீர் என்று ஏற்பட்டால் நாம் கவனமாக இருந்து வீட்டில் காலை மாலை விளக்கு ஏற்றி வீட்டை எப்பொழுதும் வெளிச்சம் சூழ வைத்து,சாம்பிராணி தூபம் போட்டு இறைவழிபாடு மேற்கொள்ள நிச்சயம் படிப்படியாக குறையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |