இன்றைய ராசி பலன்(28.10.2024)
மேஷம்
வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை காண்பீர். பணிபுரியும் இடத்தில் உண்டான பிரச்னை விலகும்.விருப்பம் நிறைவேறும்.குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
ரிஷபம்
அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்.தாய்வழி உறவுகளின் ஆதரவால் இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.ஒரு சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும்.
மிதுனம்
வழக்கு சாதகமாகும்.பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.செல்வாக்கு உயரும். வருமானத்தில் இருந்த தடை விலகும். தொழில் முன்னேற்றமடையும். உறவுகள் உங்களிடம் உதவி கேட்பார்.
கடகம்
எதிர்பார்த்த பணம் வரும். நெருக்கடி விலகும். மனக் குழப்பம் நீங்கும்.வியாபாரத்தில் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
சிம்மம்
அலுவலகத்தில் செல்வாக்கு உயரும்.முயற்சி வெற்றியாகும். உத்யோகத்தில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவு அதிகரிக்கும்.
கன்னி
அடுத்தவர் வேலைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.முடியாது என மற்றவர்கள் சொன்ன வேலையை முடித்துக் காட்டுவீர்.அண்ணன் தம்பிகளால் பிரச்சனை உருவாகும்.
துலாம்
நேற்று எதிர்பார்த்த விஷயம் நடக்கும்.மனம் உற்சாகம் பெரும்.உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த வருமானம் காண்பீர். நண்பர்கள் உதவியால் வேலைகள் முடியும்.மகிழ்ச்சியான நாள்.
விருச்சிகம்
புதிய முயற்சி நல்ல லாபம் தரும்.வியாபாரத்தில் நிறைய சிக்கல் சாந்திக்கூடும்.மற்றவர்களால் முடிக்க முடியாத வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.
தனுசு
பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.நேற்றைய எதிர்பார்ப்பு நிறைவேறும். மனதில் இருந்த சங்கடம் விலகும்.
மகரம்
இன்று சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள்.பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்.வாகனப் பயணத்தில் கவனம் தேவை. அவசர வேலைகளால் மனம் பதட்டம் அடையும்.
கும்பம்
நினைத்தபடி செயல்களை செய்து முடிப்பீர்கள்.குடும்பத்தில் அமைதி நிலவும்.வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். சிறுதொழில் செய்பவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள்.
மீனம்
மறைமுகமாக எதிரிகளை கண்டு கொள்வீர்கள்.முயற்சிக்கேற்ற வருமானம் வரும்.பொருளாதார முன்னேற்றத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |