தமிழ்நாட்டில் உள்ள கோயில்களும் வியப்பூட்டும் அதிசயங்களும்
தமிழ் நாட்டில் பல்வேறு சிறப்பு வாய்ந்த கோயில்களில் அமைய பெற்று இருக்கிறது. அதில் ஒவ்வொரு கோயில்களின் கட்டிடமும் நம்மை பிரமிக்க வைக்கும் அதிசயங்கள் நிறைந்தது. அப்படியாக இன்னும் சிறப்பாக பல்வேறு கோயில்களில் பல்வேறு அதிசயங்களும் ஆச்சிரியங்களும் நிறைந்து இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
1. சிக்கலில் வேல் வாங்கி, செந்தூரில் சூரசம்ஹாரம் செய்த முருகன் என்று மிகவும் பிரபலமான சிங்காரவேலர் கோவிலில் நடைபெறும் சூரசம்ஹாம் மிகவும் விஷேசமானது. இங்கு முருகன் அம்பிகையிடம் வேல் வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை கொண்டு காணப்படும். இது பார்ப்பதற்கே மிகவும் ஆச்சிரியமாக இருக்கும்.
2. திருநாகேஸ்வரம் சென்றால் பாவங்கள், தோஷங்கள் எல்லாம் விலகும் என்பார்கள். அப்படியாக அங்குநாகநாதஸ்வாமி கோவிலில் ராகு காலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால நீலநிறமாகிறது.
3. நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் விநாயகர் ஆறுமாத காலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார். வழிபாடு செய்யப்பட்ட சாணிப்பிள்ளையாரை கரையான்கள், வண்டுகள் அரிப்பதில்லை
4. முருகப்பெருமானின் வழிபாடுகளில் மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக விரதம் இருந்து சர்ப்பக்காவடி எடுக்கும் நிகழ்ச்சி உள்ளது. அப்படியாக, விரதம் இருந்து சர்ப்பக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள் பாம்பும், மச்சக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள் மீனும் தானாக வருவது குறிப்பிடத்தக்கது.
5. திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு தோன்றுகிறது. மேலும் இங்கு சிவபெருமானுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெறுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |