இன்றைய ராசி பலன்(15.10.2024)

Report

மேஷம்

கவனமாக செயல்படுவதால் வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும்.பொருளாதார நிலை சீராகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

ரிஷபம்

நிதானமாக செயல்பட நன்மை உண்டாகும்.உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.வருவாய் அதிகரிக்கும். எண்ணம் எளிதாக நிறைவேறும்.

மிதுனம்

வருமானத்தில் இருந்த தடை நீங்கும். நவீன பொருட்கள் வாங்குவீர்.வியாபாரத்தில் எதிர்பார்ப்பு வெற்றியாகும். மனக்குழப்பம் விலகும். கவனமுடன் செயல்பட்டு லாபம் காண்பீர்.

கடகம்

மேற்கொள்ளும் வேலையில் போராடி வெற்றி பெறுவீர்.தொழில் போட்டியாளரால் நெருக்கடி உண்டாகும். மனக் குழப்பம் அதிகரிக்கும் என்றாலும் மாலையில் விருப்பம் நிறைவேறும்.

சிம்மம்

பணிபுரியும் இடத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். முதலீட்டில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். நெருக்கடி நீங்கும்.

கன்னி

போட்டியாளர் விலகுவர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். முதலீட்டில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும்.

உலகெங்குமுள்ள முருகனைத் துதித்துப் போற்றி போற்றி

உலகெங்குமுள்ள முருகனைத் துதித்துப் போற்றி போற்றி


துலாம்

செலவு கட்டுக்குள் வரும். சேமிப்பு உயரும்.பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். திட்டமிட்டு செயல்பட்டு ஆதாயமடைவீர். மனக்குழப்பம் விலகும்.

விருச்சிகம்

விருப்பம் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணம் வரும்.வேலை பளு அதிகரிக்கும். அதற்கேற்ற லாபம் கிடைக்கும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

தனுசு

போட்டியாளர் முயற்சிகளை முறியடிப்பீர்.நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானம் உயரும்.

மகரம்

பணியாளர்கள் ஒத்துழைப்பால் லாபம் கூடும். நெருக்கடி விலகும்.திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். பணத்தேவை பூர்த்தியாகும். முயற்சியில் இருந்த தடை விலகும்.

கும்பம்

எதிர்பார்ப்பு நிறைவேறும்.தடை இல்லாத வருமானம் இருக்கும்.நல்ல செய்தி வரும்.குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர். சிறு வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.

மீனம்

வெளியூர் பயணத்தில் எதிர்பாராத வருத்தம் உருவாகலாம்.இன்று மாலை வரை பணவரவில் தடைகளை சந்திப்பீர். வரவை விட செலவு அதிகரிக்கும்.மன வருத்தம் உண்டாகும் நாள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

         

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US