தாராதேவியை ஒருமாதம் உபாசனை செய்தால் கிடைக்கும் நன்மைகள்
பொதுவாக ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு விதமான சக்திகள் உண்டு. நாம் ஒரு தெய்வத்தை ஒரு மாதம் தொடர்ந்து வழிபாடு செய்து வரும் பொழுது நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை பெறலாம். உதாரணமாக ஒருவர் சிவபெருமானை முழுமையாக சரண் அடைந்து வழிபாடு செய்கிறார்கள் என்றால் அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கர்மவினைகள் விலகுவதை காணலாம்.
அதைப்போல் முருகப் பெருமானை முழுமையாக சரண் அடைந்து வழிபாடு செய்யும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் இன்னல்கள் விலகுகிறது, திருமண தாமதம் இருந்தால் விரைவில் திருமணம் நடக்கிறது, குழந்தை பாக்கியத்தில் தாமதம் சந்திப்பவர்களாக இருந்தால் குழந்தை கிடைக்கிறது.
ஆக ஒவ்வொரு தெய்வங்களை வழிபாடு செய்யும்பொழுது அந்த தெய்வங்களுடைய தன்மையானது நமக்கு அருள் புரிந்து நம் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய சங்கடங்களை போக்குகிறது. அந்த வகையில் தாரா தேவியை ஒருவர் ஒரு மாதம் உபாசனை செய்தால் அவர்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்?
வாழ்க்கையில் நினைத்ததை சாதித்து விட முடியுமா? என்று பல்வேறு ஆன்மீக விஷயங்களையும் வழிபாடுகளை பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் அண்ணாசாமி அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







