கோயிலின் நுழைவாயிலை மிதிக்காமல் தாண்டிச் செல்வது ஏன்?

Bakthi
By Fathima Apr 18, 2024 02:19 PM GMT
Fathima

Fathima

Report

இறைவன் வாழுமிடம் கோயில், கோ என்து இறைவனையும், இல் என்பது இல்லத்தையும் குறிக்கிறது.

இதுதவிர ”ஆன்மா லயப்படுகின்ற இடம்”, ”ஆன்மாக்கள் இறைவனை ஒரு மனதுடன் வணங்குவதற்கான இடம்” என்றும் குறிப்பிடலாம்.

கவலைகள், தேவையில்லாத சிந்தனைகள் ஏதுமில்லாமல் மனதை ஒருநிலைப்படுத்தி இறைவன் மட்டுமே என்ற எண்ணத்தை மேலோங்கச்செய்கிறது கோயில்.

கோயிலின் நுழைவாயிலை மிதிக்காமல் தாண்டிச் செல்வது ஏன்? | Temple Entrance In Tamil

அப்படியாக கோயிலுக்கு செல்லும் போது, நுழைவாயில் படியினை மிதிக்காமல் தாண்டிச் செல்வோம். அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?

கோயிலின் நுழைவாயிலில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம், அதாவது துவார மகாலட்சுமி என்று சொல்வார்கள்.

வாசல்படி அமைக்கும் போதே அதன் கீழ் தங்கம், வெள்ளி முதலான பஞ்சலோகத்தையும் முத்து, பவளம் போன்ற நவரத்தினங்களையும் வைத்து அமைப்பார்கள்.

கோயிலின் நுழைவாயிலை மிதிக்காமல் தாண்டிச் செல்வது ஏன்? | Temple Entrance In Tamil

கோயில் வாசற்படி மட்டுமி்ன்றி வீட்டின் வாசற்படியையும் மிதிக்காமல் செல்ல வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் வாயிற்படிக்கு மஞ்சள் பூசி குங்குமம் வைப்பதும், விளக்கேற்றி வைப்பதும் நேர்மறை எண்ணத்தை அதிகரிக்கும், வீட்டில் தெய்வ கடாட்சம் எப்போதும் இருக்கும்.

மகாலட்சுமி மனம் குளிர்ந்து நாம் வேண்டியதை நிறைவேற்றி தருவாள், இதற்காகவே கோயில் வாசற்படியை மிதிக்காமல் செல்கிறோம்.

+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US