365 நாட்களில் ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் கோவில் பற்றி தெரியுமா?
வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் கோவில் பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஆம் கர்நாடகாவின் ஹாசன் என்ற ஊரில் ஹாசனாம்பா கோவில் அமைந்திருக்கிறது, 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலின் பிரதான கடவுள் சக்தி தேவி.
தீபாவளி பண்டிகையன்று மட்டுமே இக்கோவில் திறக்கப்படும், எறும்புப்புற்று போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்ட இக்கோவில் ஹொய்சால கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
மற்றொரு சிறப்பான விடயம் என்னவென்றால், ராவணன் பத்து தலை அல்லாமல் ஒன்பது தலைகளுடன் வீணை வாசிப்பது போன்ற சிலை அமையப்பெற்றுள்ளது.
ஒருநாள் மட்டுமே திறக்கப்படும் என்பதால் அன்றைய தினம் கோவிலில் கூட்டம் அலைமோதும்.
நெய்வைத்தியமாக அரிசி இரண்டு மூட்டைகள், தண்ணீர், நந்தா விளக்கு, பூக்கள் வைத்து கோவிலை பூட்டிவிடுவார்கள்.
அடுத்த ஆண்டு கோவிலை திறந்து பார்க்கும் போது சாதம் சூடாகவும், நெய் விளக்கு எரிந்து கொண்டு இருக்கும்.
மிகவும் சக்தி வாய்ந்த ஹாசனாம்பா, தீங்கு விளைவிக்கும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுப்பாள் என நம்பப்படுகிறது.