தென்காசி மாவட்டத்தில் அமைந்து உள்ள சிறப்பு வாய்ந்த கோயில்கள்
தமிழ் நாட்டில் இயற்கை சூழந்த மாவட்டங்களில் தென்காசி மாவட்டம் ஒன்று.வீசும் காற்றும் மலையின் அழகும் நம்மை புத்துணர்ச்சியாக வாழ சொல்ல துண்டும்.தென்காசி என்றாலே அங்கு குற்றாலம் அருவி தான் மிகவும் பிரபலம்.
இருந்தாலும் அந்த அருவிகளை சுற்றிலும் பல சிறப்புக்கள் சித்தர்கள் தியானம் செய்த கோயில் என்று பிரசித்தி பெற்ற கோயில்கள் இருக்கிறது.பலரும் குற்றலாம் சென்றால் அருவி மட்டுமே என்று குளித்து விட்டு வந்துவிடுவார்கள்.
ஆனால் அவர்கள் கட்டாயம் அருவியில் குளித்து விட்டு அங்கு இருக்கும் இறைவனை தரிசித்து வர நம்முடைய பாவம் நீங்கும் என்பது ஐதீகம்.அப்படியாக தென்காசி மாவட்டத்தில் நாம் மறக்காமல் தரிசிக்க வேண்டிய முக்கியமான கோயில்களை பற்றி பார்ப்போம்.
1.காசி விஸ்வநாதர் கோவில்
பொதுவாக தென்காசி சென்றால் பெரும்பாலான மக்கள் கண்டிப்பாக காசி விஸ்வநாதரை தரிசிக்காமல் வரமாட்டார்கள்.அவ்வளவு விஷேசனமான சிறப்புமிக்க கோயில் இந்த காசி விஸ்வநாதர் கோயில்.இக்கோயில் பராக்கிரம பாண்டியனால் திராவிட பாணியில் கட்டப்பட்டது.மேலும் இக்கோயிலை உலகம்மன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
அதாவது இந்த அம்மன் தான் காசி விஸ்வநாதருடைய மனைவி.மற்ற தலங்களில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் துர்க்கை இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
இது காசி விஸ்வநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இது சிவபெருமானின் (ஸ்வயம்பு) சுய அவதார வடிவமாகும்.தெற்கின் காசி என்று அழைக்கப்படும் இக்கோயிலில் சிவன், அம்மன், முருகன் ஆகிய மூன்று சன்னதிகள் உள்ளன.
விரல்களால் தட்டினால் ஒலி எழுப்பும் கல் தூண்கள், சிற்பங்கள், வீரபத்ரர், ரதி-மன்மதா, நடராஜர் ஆகியோரின் இரட்டைச் சிலைகள், காளி தேவி மற்றும் திருமால் சிலைகள் உள்ளன.
நம்பிக்கைகளின்படி, இக்கோயிலில் நடக்கும் வழிபாடு காசியில் உள்ள முக்கிய கோவிலுக்கு நிகரானதாகும்.கோபுர தரிசனம் புண்ணியம் என்பார்கள்.அப்படிப்பட்ட கோபுரங்களுக்காகவே தனிச் சிறப்பு பெற்ற தமிழகத் தலங்கள் பல உள்ளன.
அவற்றுள் ஒன்று உலகம்மை உடன் காசிவிஸ்வநாதர் உறையும் தென்காசி திருத்தலம், தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலின் ஒன்பது நிலை ராஜகோபுரத்திற்கு எதிரே உள்ள அகன்ற வெளித்திடல் கோபுரத்தின் கம்பீரத்தை நம்மை முழுவதுமாக இறை பக்தியில் உள்ளே இழுப்பது நன்மை குறிப்பிடத்தக்கது.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
இடம்
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் தென்காசி – 627 811, திருநெல்வேலி மாவட்டம்.
2.திருக்குற்றாலநாதர் கோவில்
இந்த கோயில் மிகவும் அழகான சூழலில் அமைந்த கோயில்.அதாவது குற்றாலம் மெயின் அருவி அருகில் திருக்குற்றாலநாதர் வீற்றி இருக்கிறார்.திருக்குற்றாலம் அல்லது திரிகூடாசலம் என்பது நடராஜப் பெருமானின் ஐந்து பஞ்ச சபைகளில் ஒன்றாகும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசியிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.குற்றாலநாதர் கோயில் சிவபெருமானை ஸ்ரீ குற்றாலநாதர் என்றும் அவரது துணைவி பார்வதி தேவி குழல்வாய்மொழி அம்மன் என்றும் அழைக்கபடுகிறார்கள்.
புராணத்தின் கதைகளின் படி இக்கோயில் முதலில் வைணவ கோவிலாக இருந்திருக்கிறது.பிறகு சிவபெருமானின் வேண்டுகோளுக்கிணங்க, இமயமலையில் நடந்த சிவன் மற்றும் பார்வதி தேவியின் திருமணத்திற்கு வந்திருந்த திரளான கூட்டத்தால் ஏற்பட்ட நிலையற்ற தன்மையை சமன் செய்ய அகஸ்த்தியர் தெற்கு நோக்கி சென்றார்.
அகஸ்த்தியர் விஷ்ணு கோவிலை சிவலிங்கமாக மாற்றியதாக நம்பப்படுகிறது. இந்த ஆலயம் சித்ர சபை என்று அழைக்கப்படும் சிவபெருமானின் (நடராஜரின் வடிவத்தில்) பஞ்ச சபை க்ஷேத்திரங்களில் ஒன்றாகும்.
மற்ற நான்கு நாட்டிய அரங்குகளும் சிதம்பரம், மதுரை, திருவாலங்காவு மற்றும் திருநெல்வேலியில் காணப்படுகின்றன. கோவிலில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு அழகிய இடத்தில் அமைந்துள்ள சித்திர சபை அல்லது பட மண்டபம் நூற்றுக்கணக்கான சுவரோவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டு நேரம்
காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை
இடம்
W7J9+CXX, குற்றாலம் ரோடு,தமிழ்நாடு 627802
3.திருமலை கோவில்
செங்கோட்டையில் மாவட்டத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் பைம்பொழில் என்ற இடத்தில் சிறிய மலைமீது அமைந்திருக்கிறது அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோவில். இந்த மலைமீது ஏறிச் செல்ல சுமார் 544 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த படிக்கட்டுக்கள் வழியாக ஏறிச் சென்றால் திருமலைக்குமரன் கோவிலை சென்றடையலாம். வழியில் இடும்பனுக்கும், தடுவட்ட விநாயகருக்கும் தனிக் கோவில் உள்ளது. கோவிலின் வடக்கு பிரகாரத்தில் தனிக் கோவிலில் வடக்கு திசை நோக்கி காட்சியளிக்கும் தில்லைக் காளி அம்மன் இந்த தலத்தின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறார்.
மலை மீது வாகனங்களில் செல்வதற்கு ஏற்றவாறு சாலை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.மலை மீது அமையப் பெற்றுள்ள இந்த கோவிலின் முகப்பில் 16 படிகள் ஏறிச் சென்று வணங்கும் சன்னதியில் உச்சி பிள்ளையார் அருள்புரிகிறார்.
இந்த பதினாறு படிகளை ஏறிச் சென்று உச்சி பிள்ளையாரை வழிபட்டால் பதினாறு பேறுகளும் கிட்டும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
அருணகிரிநாதர், தண்டபாணி சுவாமிகள், கவிராசப்பண்டாரத்தையா ஆகியோர் இந்த தலத்தில் உள்ள பெருமான் மீது பல பாடல்கள் பாடியுள்ளார்.
வழிபாட்டு நேரம்
காலை 6 முதல் மதியம் 1 மணி வரை, மாலை 5 முதல் இரவு 8:30 வரை
4.மதுரவாணி அம்பாள் கோயில், சாம்பவர் வடகரை
பாண்டவர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பழமையான கோயில், தென்காசியிலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது. சாம்பவர் என்ற மரபினர் சிவன் கோயில் குருக்களாக இருந்தனர். ஆகவே, இந்த கிராமம் சாம்பவர் வடகரை என்ற பெயர் பெற்றது.
இங்கு வீற்றிருக்கும் தெய்வங்கள் திருமூலநாதர் மற்றும் மதுரவாணி அம்பாள். இவற்றைத் தவிர இலஞ்சி முருகன் கோயில், ஆயக்குடி பாலசுப்ரமணிய சுவாமி கோயில் ஆகியவை தென்காசி மாவட்டத்தில் பிரபலமான கோவில்கள். இந்த இரண்டு கோயில்களும் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியத் தலங்கள்.
வழிபாட்டு நேரம்
காலை 5 மணி முதல் 10 மணி வரை. மாலை 5 முதல் 8 வரை.
5.சித்திரசபை
தமிழகத்தில் சிவ பெருமான் நடனமாடிய பஞ்ச சபைகளுள் மிகவும் பழமையானது குற்றாலம் சித்திர சபை.குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோவிலின் துணைக் கோவிலான சித்திரசபை, குற்றாலநாதர் கோவிலுக்கு வடபகுதியில் ஐந்தருவிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது.
திருவாலங்காடு - இரத்னசபை, தில்லை(சிதம்பரம்) - கனகசபை, திருவாலவாய் - வெள்ளிசபை, திருநெல்வேலி - தாமிரசபை, திருக்குற்றாலம் - சித்திரசபை மற்ற 4 சபைகளில் நடராஜர் விக்கிரமாகக் காட்சியளிக்கிறார். இங்கு ஓவியமாக காட்சியளிக்கிறார்.
மார்கழி திருவாதிரை திருவிழாவின்போது முதலில் சித்திரசபையில் பூஜைகள் நடைபெற்ற பின்னரே, குற்றாலநாதர் கோவிலில் பூஜைகள் நடத்தப்படும்.
ஐப்பசி திருவிழா, சித்திரை விஷுத் திருவிழாவின்போது, சித்திரசபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுவது சிறப்பாகும்.
தமிழகத்திலுள்ள ஐந்து சபைகளுள், குற்றாலத்தில் உள்ள சித்திரசபை மட்டுமே பஞ்சபூதங்களையும் அடக்கி ஆளும் வகையில் அமைந்துள்ளது. இக்கோவிலில், இறைவன் ஓவிய வடிவில் காட்சியளிக்கிறார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |