தைப்பூசம் அன்று சொல்லவேண்டிய சக்திவாய்ந்த முருகர் மந்திரம்
இன்று பிப்ரவரி 11 முருகப்பெருமானின் மிகவும் சக்தி வாய்ந்த தைப்பூச திருநாள்.இன்றைய தினம் பல பக்தர்கள் காவடி எடுத்து,பாதையாத்திரை சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள்.அப்படியாக இன்று பலரும் முருகப்பெருமானை வழிபாடு செய்ய காலையிலே அருகில் உள்ள முருகன் ஆலயம் அல்லது அவர்களுக்கு பிடித்த முருகப்பெருமான் ஆலயம் சென்று அவர்களுடைய வழிபாட்டை வைப்பார்கள்.
இவ்வளவு சக்தி வாய்ந்த நாளில் நம்முடைய வாழ்க்கைக்கு ஏதேனும் கோரிக்கை இருந்தால் மட்டுமே விரதம் இருந்து வழிபாடு செய்யவேண்டும் என்று அவசியம் இல்லை.உங்கள் வாழ்க்கை மிக சிறப்பான முறையில் இருந்தாலும் நீங்கள் முருகப்பெருமானை வழிபாடு செய்ய நிச்சயம் உங்களுக்கு முருகன் அருளால் வாழ்க்கை இன்னும் வளமாகும்.
அப்படியாக இவ்வளவு விஷேசமான நாளில் நாம் முருகப்பெருமானின் அருள் பெற அவருடைய சக்தி வாய்ந்த மந்திரம் சொல்லி வழிபாடு செய்ய நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றமும் வெற்றியும் கிடைக்கும்.
சண்முக மந்திரம்:
ஓம் நமோ பகவதே
சுப்ரமண்யாய ஷண்முகாய மகாத்மனே
ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார
காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய
வீராய சூராய மக்தாய மஹா பலாய
பக்தாய பக்த பரிபாலனாயா
தனாய தனேஸ்வராய
மம ஸர்வா பீஷ்டம்
ப்ரயச்ச ஸ்வாஹா!
ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ!
நாம் சாதரணமாக கண்கள் முடி இறைவனிடம் வேண்டுதல் வைப்பதற்கும் அவர்களுக்குரிய சக்தி வாய்ந்த மந்திரம் சொல்லி வேண்டுதல் வைப்பதற்கும் நாம் அதிக வித்தியாசங்களை பார்க்கலாம்.அதாவது நாம் முருக பெருமானின் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்ய அவன் அருளால் நம்முடைய தோஷங்கள் படிப்படியாக குறையும்.
ஆக கோயிலுக்கு சென்று வழிபாடு வைத்தாலோ அல்லது வீட்டில் இருந்தே உங்களுடைய பூஜைகள் செய்தாலும் முருகப்பெருமானின் இந்த மந்திரம் சொல்லி வழிபாடு செய்ய உங்கள் வாழ்வில் நடக்கும் மாற்றங்களை பார்க்கமுடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |