ஜாதகத்தில் உங்களுக்கு சந்திர தோஷம் இருந்தால் கட்டாயம் இது நடக்குமாம்
பெருமாள் என்றவுடன் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அவர் கைகளில் இருக்கக்கூடிய சங்கும் சக்கரம் தான். ஆனால் அவர் சிவபெருமானை போல் ஒரு தலையில் பிறை சந்திரனை சூடிக்கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அதை பற்றி பார்ப்போம்.
108 திவ்ய தேசங்களில் 25 ஆவது தலமாக இருக்கக்கூடியது தலைச்சங்காடு. அதாவது பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட பல சங்குகளில் தலைசிறந்த "பாஞ்சஜன்யம்" என்னும் சங்கு தோன்றிய இடம் இது என்பதால் இவ்விடத்திற்கு தலைச்சங்காடு என்ற பெயர் வந்தது.

இங்கு சந்திர பகவான் அவர் பெற்ற சாபத்திலிருந்து நீங்க பெருமாளை நினைத்து தவம் இருந்திருக்கிறார். அவருக்கு அருள் புரிந்த பெருமாள் சந்திரனே தன் திருமுடியில் அதாவது தலையில் சூடிக்கொண்டார்.
இதனால் இவருக்கு "நாண்மதியப்பெருமாள்" (சந்திரசாபஹரர்) என்று பெயர் வந்தது. ஒருவர் ஜாதகத்தில் சந்திர தோஷம் இருந்தால் அவர்களுக்கு மனக்குழப்பம், தாயார் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் போன்ற நிலை உருவாகும்.

அவர்கள் இந்த திருக்கோவிலுக்கு வந்து சந்திர புஷ்கரணியில் நீராடி பெருமாளை தரிசனம் செய்தால் அவர்களுக்கு உரிய சந்திர தோஷமானது விலகும். இக்கோயிலில் மூலவராக நாண்மதியப்பெருமாளும், தாயார் தலைச்சங்க நாச்சியார் (செங்கமலவல்லி) அருள் பாலித்து வருகிறார்கள்.
மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் (சுமார் 18 கி.மீ) இத்தலம் அமைந்துள்ள இக்கோயிலுக்கு ஒரு முறையாவது சென்று வழிபாடு செய்தால் நமக்கு மன அமைதியும் தோஷ நிவர்த்தியும் கட்டாயம் பெருமாளின் அருளால் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |