இந்த ராசிகாரர்களுக்கு இந்த மனிதரை பார்த்தாலே பிடிக்காதாம்.. ஏன் தெரியுமா?
மேஷம்:
இவர்களுக்கு யாராவது தைரியமாக எதிர் கொள்ள முடியாமல் பயம் கொண்டால் அவர்களை பிடிக்காது.
ரிஷபம்:
நம்பிக்கை இழந்தவர்கள் மற்றும் பணத்தின் உடைய அருமை தெரியாதவர்களை இவர்கள் விரும்புவதில்லை.
மிதுனம்:
அதிகமாக செலவு செய்யக் கூடியவர்கள் மற்றும் குறுகிய மனப்பான்மை உடையவர்களை இவர்களுக்கு பிடிப்பதில்லை.
கடகம்:
ஒருவருக்கு ஜால்ரா கட்டுபவர் மற்றும் ஏளனமாக பேசுபவர்களை இவர்கள் முற்றிலுமாக வெறுக்கிறார்கள்.
சிம்மம்:
சோம்பேறியாக இருக்கக்கூடியவர்கள் மற்றும் பிறரிடம் போலியாக நடிக்க கூடியவர்களை இவர்கள் தன் பக்கம் வைத்துக் கொள்வதில்லை.
கன்னி:
அலட்சியமாக பதில் சொல்பவர்கள் மற்றும் ஒழுக்கம் இல்லாதவர்களை இவர்கள் விரும்புவதில்லை.
துலாம்:
இவர்களுடைய வார்த்தைக்கு மரியாதை கொடுக்காதவர்கள் மற்றும் விதண்டாவாதம் செய்பவர்களை இவர்கள் விரும்புவதில்லை.
விருச்சிகம்:
துரோகம் செய்பவர்கள் மற்றும் தன்னைப் பற்றி பெருமிதம் கொள்பவர்களை இவர்கள் முற்றிலும் வெறுக்கிறார்கள்.
தனுசு:
அலட்சியம் செய்பவர்கள் மற்றும் அக்கறை இல்லாதவர்களை இவர்கள் விரும்புவதில்லை.
மகரம்:
தங்களுடைய பொறுப்பை செய்யாமல் தட்டிக் கழிப்பவரை இவர்கள் விரும்ப மாட்டார்கள்.
கும்பம்:
எதைப் பற்றியும் யோசிக்காமல் சுயநலமாக இருப்பவர்களை இவர்கள் மிகவும் வெறுக்க கூடியவர்களாக இருக்கிறார்கள்.
மீனம்:
யார் ஒருவர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க தெரியாமல் இருக்கிறார்களோ அவர்களை இவர்களுக்கு பிடிப்பதில்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |