ஆகஸ்ட் மாதத்தில் ஆடம்பரமாக வாழக்கூடிய ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தின் படி ஒருவரது பிறந்த நட்சத்திரம் ராசியினைக் கொண்டு அவர்களின் எதிர்காலத்தினை கணிக்கமுடியும்.
ஆனால் ஒருவர் பிறந்த மாதத்தினை வைத்தும் அவரது குணங்கள், எதிர்காலத்தில் அவர்களுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தினையும் ஓரளவிற்கு கணிக்க முடியும்.
தற்போதும் ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களில் எந்தெந்த ராசியினர் ஆடம்பரமாக வாழ்வார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கத்தைக் கொண்ண்டுள்ள மேஷ ராசியினருக்கு இந்த ஆகஸ்ட் மாதத்தில் நிதி வளர்ச்சி அதிகரிப்பதுடன், புதிய தொழில் வாய்ப்பும் கிடைக்கும். மேலும் முதலீடு செய்வது, சேமிப்பு திட்டத்தின் மூலமும் அதிர்ஷ்டம் கிடைக்கலாம்.
சிம்மம்
சூரிய கிரகணத்தினை ஆதிக்கமாக வைத்திருக்கும் சிம்ம ராசியினர் இந்த ஆகஸ்ட் மாதத்தில் தன்னம்பிக்கை மற்றும் வெற்றி அதிகரிப்பதுடன், வேலை தொடர்பான பயணங்கள் மற்றும் பதவி உயர்வு காரணமாக பொருளாதாரத்தில் உயர்ந்து காணப்படுவார்கள்.
துலாம்
துலாம் ராசியினர் சுக்கிரனை ஆதிக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆகஸ்ட் மாதத்தில் இவர்களுக்கு ஆடம்பரமான வாழ்க்கை மற்றும் நிதி உயர்வு கிடைப்பதுடன், உறவுகள், வணிகம் மூலம் நல்லதொரு ஆதாயத்தை பெற முடியுமாம்.
விருச்சிகம்
குரு மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் இருக்கும் விருச்சிக ராசியினர் இந்த ஆகஸ்ட் மாதத்தில் நிதி விடயங்களில் முன்னேற்றத்தை அடைவதுடன், கூட்டு முயற்சி மற்றும் புதிய திட்டங்களில் வெற்றியையும், லாபத்தையும் காணலாம்.
மகரம்
மகர ராசியினர் சனி பகவானின் ஆதிக்கத்தில் இருக்கின்றனர். இவர்கள் இந்த ஆகஸ்ட் மாதத்தில் உழைப்பிற்கு ஏற்ப பலனை பெறுவதுடன், நீண்ட கால முதலீடு மற்றும் சொத்து தொடர்பான முடிவுகள் சாதகமாகவும், நல்ல பலனையும் அளிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







