தினம் ஒரு திருவாசகம்
By Sakthi Raj
"ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்
சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்
தாயான தத்துவனைத் தானே உலகேழும்
ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய்"
விளக்கம்
சிவபெருமான் சிறிதேனும் இடைவெளியின்றி, நினைப்பவர் உள்ளத்தில், நீக்கமற நிறைந்திருப்பவன். அவ்வாறு நினைக்காதவர்க்கு தொலைவில் இருப்பவன்.
அடியவர்களுக்கு தொண்டனாக இருப்பவன். திருபெருந்துறை திருத்தலத்தை வாழ்விடமாகக் கொண்டவன். வேதங்களின் வடிவமாகத் திகழ்பவன். உமாதேவியாரைப் பாகமாகக் கொண்டவன்.
நாயான நம்மையெல்லாம் ஆட்கொண்ட தலைவன். தாயெனும் தத்துவப் பொருளானவன். தானே உலகங்கள் ஏழானவன். அவற்றை நல்ல முறையில் ஆள்கின்றவன்.
அத்தகையப் பெருமிதப் பண்புகள் கொண்டவனை இப்போது நாம் பாடி மகிழ்வோமாக! அம்மானை!
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |