தினம் ஒரு திருவாசகம்
பித்த னென்றெனை உலகவர் பகர்வதோர் காரணம் இதுகேளீர்
ஒத்துச் சென்றுதன் திருவருட் கூடிடும் உபாயம தறியாமே
செத்துப் போய்அரு நரகிடை வீழ்வதற் கொருப்படு கின்றேனை
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.
விளக்கம்
பித்தன் என்று கூறுதற்குக் காரணமாவது, அடிகள் தம் நினைவின்றியிருந்ததையாம். இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட அடியார் பித்தரைப் போன்றிருப்பர் என்பதாம். ‘பித்தனிவனென என்னை யாக்குவித்து’ என்று அடிகள் இறைவனது திருவிளையாடலை வியந்து கண்ட பத்தில் கூறுகிறார்.
ஒத்துச் செல்லுதலாவது, தம்முனைப்பின்றித் திருவருள் வழி நடப்பது. செத்துப் போதலாவது, திருவருளையடையாது மீண்டும் பிறத்தற்கு ஏதுவாக மடிதலாம்.
இதனால், இறைவன் திருவருள் பெற்றவர் உலகத்தார்க்குப் பித்தர் போலத் தோன்றுவர் என்பது கூறுப்பட்டது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |