தினம் ஒரு திருவாசகம்
By Sakthi Raj
போகம் வேண்டி வேண்டி லேன்பு
ரந்த ராதி இன்பமும்
ஏக நின்க ழலிணைய
லாதி லேனென் எம்பிரான்
ஆகம் விண்டு கம்பம் வந்து
குஞ்சி அஞ்ச லிக்கணே
ஆக என்கை கண்கள் தாரை
ஆற தாக ஐயனே.
விளக்கம்
இந்திரன் முதிலியோர் பதங்களில் பெறும் இன்பமும் நிலையாதனவே ஆதலால், 'வேண்டிலேன் புரந்தராதி இன்பமும்' என்றார். 'கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு' என்று முன்னரும் கூறினார்.
ஆகம் விள்ளல் முதலியன அன்பர்பாற்காணப்படும் மெய்ப்பாடுகளாம். குஞ்சி - குடுமி. இங்கு அதனையுடைய தலைக்காயிற்று.
இதனால், முன்னைத் தவமிகுதியால் இறைவன் திருவடியில் அன்பு உண்டாகப்பெற்றவர், அந்த அன்பினை மேலும் பெருக்கிக்கொள்ளுதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |