சித்திரை மாதத்தில் சுப காரியங்கள் செய்யலாமா? செய்யக் கூடாதா?

Report

தமிழ் மாதம் 12 மாதங்களில் சித்திரை மாதத்தை தான் நாம் தமிழ் வருட பிறப்பாக கொண்டாடுகின்றோம். இந்த சித்திரை மாதம் பல்வேறு விசேஷங்கள் நிறைந்ததாக இருக்கிறது. அப்படியாக, சித்திரை மாதத்தில் சுபகாரியங்கள் செய்யலாமா? கூடாதா? என்பதை பற்றி பார்ப்போம்.

சித்திரை மாதத்தில் கட்டாயம் நாம் எல்லா சுபகாரிய தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தலாம். அதேபோல் இந்த மாதத்தில் ஒரு மரமாவது நடுவது சிறந்த பலனையும் புண்ணியத்தையும் கொடுக்கும். ஒரு மரம் வளர்ப்பதனால் பல தலைமுறையினர் அந்த மரத்தினால் நிழலையும் அதனால் கிடைக்கக்கூடிய பயணையும் பெற முடிகிறது.

சித்திரை மாதத்தில் சுப காரியங்கள் செய்யலாமா? செய்யக் கூடாதா? | Things Do And Donts On Chitirai Month

2026: சுக்கிரனின் நட்சத்திர மாற்றம்.. இந்த ராசிகளுக்கு விதியே மாறப்போகிறதாம்

2026: சுக்கிரனின் நட்சத்திர மாற்றம்.. இந்த ராசிகளுக்கு விதியே மாறப்போகிறதாம்

மேலும், சித்திரை மாதத்தில் சித்ரா பௌர்ணமி மிகவும் விசேஷமானது. அன்றைய தினம் ஏழை எளிய மக்களுக்கு உணவு, உடை, தானம் செய்வதால் முன்னோர்களின் ஆசிர்வாதம் பெறுவதோடு நமக்கு நல்ல புண்ணியம் சேர்கிறது.

இருப்பினும் சித்திரை மாதத்தில் நாம் ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள். அதாவது சித்திரை மாதத்தில் புதிய வீடு கட்டி பால் காய்ச்சுதல் கூடாது. அதேப்போல் வீட்டிற்கு நிலை வைப்பது, கான்கிரீட் போடுவது, கூரை போடுவது போன்ற எந்த விஷயங்களும் செய்யாமல் இருப்பது நல்லது.

தவறியும் செடி கொடிமரம் போன்றவை வெட்டுதல் கிணறு குளம் போன்றவை அமைத்தல் கூடாது. குறிப்பாக நிலம் மற்றும் வீடுகள் பராமரிப்பு எந்த ஒரு வேலைகளையும் செய்யக் கூடாது. விவசாய வேலைகள் தொடங்குவது தவிர்க்க வேண்டும் என்று சாஸ்திர ரீதியாக சொல்லப்படுகிறது.

சித்திரை மாதத்தில் சுப காரியங்கள் செய்யலாமா? செய்யக் கூடாதா? | Things Do And Donts On Chitirai Month

2026: 40 வருடம் கழித்து கோடீஸ்வர யோகம் பெரும் 3 முக்கிய ராசிகள்

2026: 40 வருடம் கழித்து கோடீஸ்வர யோகம் பெரும் 3 முக்கிய ராசிகள்

இருப்பினும் சித்திரை மாதத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் மிகச்சிறப்பாக நடைபெறும். எவர் ஒருவர் இந்த திருக்கல்யாண வைபவத்தை தொடர்ந்து 12 ஆண்டுகள் தரிசனம் செய்கிறார்களோ அவர்களுக்கு தலைமுறை தோஷமே நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

அதோடு சித்திரை மாதத்தில் தான் அட்சய திருதியை வரும். அன்றைய நாளில் நாம் வீடுகளில் தங்கம் வெள்ளி போன்ற பொருட்கள் வாங்குவதினாலும் அன்றைய நாளில் தானம் செய்வதாலும் நமக்கு நிச்சயம் பிறவி பலனை கொடுக்கிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US