கடவுளுக்கு ஆரத்தி எடுக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்
இந்து மதத்தில் இறைவனுக்கு பூஜை செய்து வழிபாடு செய்யும்பொழுது ஆரத்தி காண்பித்து வழிபாடு செய்வோம். இதை நாம் வீடுகளில் பூஜை செய்யும் பொழுதும் கடைபிடிப்போம். மேலும் கோயில்களில் ஆரத்தி எடுக்கும் பொழுது நாம் கவனித்து இருந்தால் வலது பக்கத்தில் தான் ஆரத்தி எடுப்பார்கள். இதற்கு பின்னால் ஒரு சில காரணமும் ரகசியமும் இருக்கிறது. அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
நாம் இயற்கையின் இயல்பான விஷயங்களை பின்பற்றுவதற்கான அடையாளம் தான் ஆரத்தி எடுக்கும் பொழுது வலது பக்கமாக எடுப்பது ஆகும். மேலும், கடிகாரம் என்பது முன்னோக்கி ஓடக்கூடியதாகவும், வலது பக்கத்தை நோக்கி சுழற்சி செய்யக் கூடியதாகவும் இருக்கிறது.
ஆதலால் ஆரத்தி எடுக்கும் பொழுது வலது பக்கத்தை நோக்கி நாம் சுழற்சி செய்து தீபாராதனை காண்பிக்கும் பொழுது நாம் இந்த இயற்கையுடன் ஒன்றி வாழ்வதையும் நம் வாழ்க்கை முன்னோக்கி செல்வதற்கான பலன்களை பெறுவதற்காக வேண்டுதல் வைப்பதை குறிப்பதாகும். அதோடு எப்பொழுதும் மறந்தும் இடது பக்கத்தை நோக்கி ஆரத்தி காண்பிக்க கூடாது.
ஒரு சிலர் தெரிந்தோ தெரியாமலோ ஆரத்தி எடுக்கும் பொழுது மூன்று முறை வலது பக்கமாகவும் மூன்று முறை இடது பக்கமாகவும் ஆரத்தி எடுப்பதை நாம் பார்க்க முடியும். அவ்வாறு எடுப்பது முற்றிலும் தவறான விஷயமாகும். மேலும் நம்முடைய இந்து மதத்தில் வலது பக்கம் என்பது மிகவும் புனிதமானதாகவும் முக்கியமானதாகவும் கருதப்படுகிறது.
அதனால் தான் நம் கோவிலில் பிரகாரத்தை சுற்றி வரும் பொழுதும் கருவறையை சுற்றி வரும் பொழுதும் வலது பக்கத்தில் சுற்றி வருகின்றோம். இந்த கருத்துக்களை கொண்டு தான் பெரியோர்களும் எந்த ஒரு பொருட்களை ஒருவரிடம் பெறுவதாக இருந்தாலும் அல்லது ஒரு பொருட்களை நாம் ஒருவருக்கு கொடுப்பதாக இருந்தாலும் வலது கையை பயன்படுத்தி கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
ஆதலால் இனிமேல் ஆரத்தி எடுக்கும் பொழுது வலது நோக்கி எடுங்கள். இவை நமக்கு நேர்மறையான சக்திகளை பெற்றுக்கொடுத்து நம் வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







