திருமணமான பெண்கள் அம்மா வீடுகளிலிருந்து எடுத்துச் செல்லக்கூடாது 10 பொருட்கள்

By Sakthi Raj Aug 27, 2026 12:00 PM GMT
Report

பொதுவாக, திருமணமான பெண்கள் தங்களுடைய கணவன் வீடுகளில் இருந்து அம்மா வரும் பொழுது சில தேவையான பொருட்களை எடுத்துச் செல்வது வழக்கம்.

அந்த வகையில், நாம் என்னதான் அம்மா வீட்டில் இருந்து உரிமையாக சில பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்கின்ற பொழுதும் நாம் ஒரு சில பொருட்களை எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இதனால் நம்முடைய பிறந்து வீட்டில் சில பணக்கஷ்டங்கள் வரலாம் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் பெண்கள் அம்மா வீட்டில் இருந்து எடுத்துச் செல்ல கூடாத 10 பொருட்களை பற்றி பார்ப்போம்.

இந்த ஆலயம் செல்ல புண்ணியம் வேண்டுமாம்.. கட்டாயம் ஒரு முறை தரிசித்து வாருங்கள்

இந்த ஆலயம் செல்ல புண்ணியம் வேண்டுமாம்.. கட்டாயம் ஒரு முறை தரிசித்து வாருங்கள்

எப்பொழுதும் பெண்கள் கூர்மையான பொருட்களை அம்மா வீடுகளிலிருந்து எடுத்துச் செல்லக்கூடாது. இது மிகப்பெரிய அளவில் சண்டையை உண்டு செய்யும்.

திருமணமான பெண்கள் அம்மா வீடுகளிலிருந்து எடுத்துச் செல்லக்கூடாது 10 பொருட்கள் | Things Married Women Shouldnt Take From Mom House

அதை போல், துடைப்பம் முறம் போன்ற பொருட்களையும் எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். மளிகை பொருட்களின் புளி யை எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

பெண்கள் தாலிக்கயிறு மாற்றும் பொழுது இந்த 6 தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்

பெண்கள் தாலிக்கயிறு மாற்றும் பொழுது இந்த 6 தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்

அதேபோல், கல் உப்பு மற்றும் எண்ணெய் ஒருபோதும் எடுத்துச் செல்லக்கூடாது ஒருபொழுதும் தாய் வீடுகளில் பயன்படுத்திய விளக்கு எடுத்து செல்லக்கூடாது. தாய் வீட்டில் இருந்து முருங்கை மரம் இருந்தால் அதிலிருந்து முருங்கைக்காய் முருங்கை கீரை எடுத்துச் செல்லக்கூடாது.

அதேபோல், பிறந்து வீடுகளில் இருந்து அரிசி படி எடுத்துச் செல்லக்கூடாது. தாய் வீட்டில் இருந்து அசைவ உணவுகளையும் நாம் எடுத்து செல்லக்கூடாது. தாய் வீடுகளில் இருந்து ஒரு பொழுதும் கோலமாவு எடுத்து சொல்லக்கூடாது.

தாய் வீடுகளில் இருந்து குங்குமம் வைத்துக் கொள்ளலாம். ஆனால் குங்குமத்தை எடுத்துச் செல்லக்கூடாது. 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US