திருமணமான பெண்கள் தவறியும் இந்த நகைகளை அணியக் கூடாதாம்
ஜோதிட சாஸ்திரத்தில் திருமணமான பெண்கள் சில அணிகலன்களை அணியலாம் என்றும் அணியக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது. அதாவது திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய கணவன் மற்றும் குடும்பத்தின் ஆயுள், அமைதி பொருளாதார ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்கள் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
அதன் அடிப்படையில் திருமணம் ஆன பெண்கள் எந்த நகைகளை அணியலாம்? அணியக் கூடாது? என்பதை பற்றி பார்ப்போம்.
திருமணமான பெண்கள் தங்க நகைகளை அணியும் பொழுது அவர்களுக்கு லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்கிறது.

ஆனால் அவர்கள் தவறியும் கருப்பு நிற வளையல்களை அணியக்கூடாது. இவை அணியும் பொழுது கணவன் மனைவிக்குள் சண்டை குடும்பத்தில் அமைதி இன்மையை அவை கொடுக்கிறது.
மேலும், திருமணமான பெண்கள் முடிந்த அளவிற்கு கருப்பு நிற காலணிகள் அணிவதையும் தவிர்ப்பது நல்லது. இவை காரியங்களில் தாமதம், நிதி பற்றாக்குறை, கடன் பிரச்சனைகளை உண்டு செய்யும். அப்படியாக திருமணம் ஆன பெண்கள் வெள்ளி மெட்டி அணிவது மிகவும் நன்மையை கொடுக்கிறது.
அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு இருக்கக்கூடிய மன அழுத்தத்தை குறைத்து கர்ப்பப்பை ஆரோக்கியத்தை அதிகரித்து நல்ல பலன்களை கொடுக்கிறது. அதேபோல் திருமணமான பெண்கள் வெள்ளை நிற சேலைகளை அணியக்கூடாது. இதனால் அவர்களுக்கு சண்டை, கடன் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

திருமணமான பெண்கள் அவசியமாக நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். இது அவர்களுக்கு ஏற்படக்கூடிய கண் திருஷ்டி, பொறாமை ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பதோடு குடும்பத்தில் அமைதியை கொடுக்கிறது.
முக்கியமாக திருமணமான பெண்கள் அணியக்கூடிய தாலியில் எக்காரணத்தைக் கொண்டும் இரும்பு பொருட்களை சேர்க்கக்கூடாது. தாலியில் சேஃப்டி பின் அணிவது மிகவும் தவறானது. இதனால் சனி தோஷம், பொருளாதார பாதிப்பு, கணவன் ஆயுள் குறைவு போன்றவை ஏற்படுத்துகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |