தமிழ் கடவுளுக்கான சஷ்டி விரத நாட்களில் மறந்தும் செய்யக் கூடாத தவறுகள்: மிளகு நீர் செய்யும் அதிசயம்
இந்து மக்கள் அதிகமாக வழிபடும் கடவுள்களில் ஒருவர் தான் முருகன்.
இதனாலேயே இவரை தமிழ்க் கடவுள் என அழைக்கிறார்கள். இவருக்கு உகந்த விரதமாக சஷ்டி விரதம் பார்க்கப்படுகின்றது.
சஷ்டி விரத நாட்களில் சிலர் ஒரு வேளை உணவு மாத்திரம் சாப்பிடுவார், சிலர் சைவ உணவுகள் மாத்திரம் சாப்பிடுவார்கள். இன்னும் சிலர் மிளகு நீர் மாத்திரம் 6 நாட்களும் தொடர்ந்து எடுத்து கொள்வார். இந்த முடிவுகளை அவரவர் உடல்நிலையை பொறுத்து தீர்மானம் எடுப்பார்கள்.
இவ்வளவு சிறப்புமிக்க நாட்களில் மறந்தும் கூட சில தவறுகளை செய்யக்கூடாது. இது விரதத்தை பாதிக்கலாம் என கூறப்படுகின்றது.
அந்த வகையில், சஷ்டி விரதம் பிடிக்கும் போது செய்யக் கூடாத தவறுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
சஷ்டி விரத நாட்களில் மறந்தும் செய்யக் கூடாத தவறுகள்
1. சஷ்டி விரத காலத்தில் முருகப்பெருமானை மனதளவில் நினைத்து கொண்டு காரியங்களை செய்ய வேண்டும்.
2. சஷ்டி விரத காலங்களில் கேட்டால் கேட்ட வரம் கிடைக்கும். அதனால் விரதத்தை கன்னியமாக இருக்க வேண்டும்.
3. சூரசம்ஹாரம் தினத்தில் பகல் உறக்கம் கூடாது. விரதம் இருப்பவர்களும் இதனை கடைபிடிக்க வேண்டும்.
4. விரதம் இல்லாதவர்கள் கூட விரத நாட்களில் முருகப்பெருமானை நினைத்து பகல் முழுவதும் அவருடைய நாமத்தை கூற வேண்டும். இப்படி செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
5. சூரசம்ஹாரம் நடைபெறும் போது மறந்தும் கூட அசைவம் உணவுகள் சாப்பிடக் கூடாது.
6. என்ன பிரச்சினையாக இருந்தாலும் கெட்ட வார்த்தை பிரயோகம் இருக்கக் கூடாது. கோபத்தை கட்டுபடுத்தி மன அமைதியுடன் இருப்பது நல்லது.
7. தேவையற்ற பேச்சுக்கள் கூடாது. மற்றும் தீய செயல்கள் போன்றவற்றை சிந்தையிலும் நினைக்காமல் இருக்கக் கூடாது. சஷ்டி நாட்களில் சந்தோசமாக இருக்க வேண்டும் என்றால் இப்படியான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.