திருமண பொருத்தத்தின் பொழுது நாம் கட்டாயம் கவனிக்கவேண்டியவை

By Sakthi Raj Apr 06, 2026 07:00 AM GMT
Report

நம்முடைய இந்து மத கலாச்சாரத்தில் திருமணம் என்பது பல இடங்களில் ஜாதக பொருத்தம் பார்த்த பிறகு நடைபெறுகிறது. அப்படியாக பெண் குழந்தைகள் வைத்திருப்பவர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்யும் பொழுது ஜாதகத்தில் குறிப்பிட்ட சில முக்கியமான விஷயங்களை கருத்தில் கொண்டு திருமணம் செய்வது அவசியம் என்று சொல்கிறார்கள்.

அப்படியாக ஜாதக ரீதியாக நாம் என்னென்ன விஷயங்கள் கவனமாக பார்க்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

திருமண பொருத்தத்தின் பொழுது நாம் கட்டாயம் கவனிக்கவேண்டியவை | Things Should Check In Horoscope Before Wedding

2026: கும்ப ராசியினர் ஏப்ரல் 8 முதல் 23 ஆம் தேதி வரை இதை செய்யாதீர்கள்

2026: கும்ப ராசியினர் ஏப்ரல் 8 முதல் 23 ஆம் தேதி வரை இதை செய்யாதீர்கள்

திருமணம் செய்யும் பொழுது முடிந்தவரை ஒரே நட்சத்திரம் கொண்ட மனமகன் மணமகளை திருமணம் செய்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் இவர்கள் இருவரும் எலியும் பூனையும் ஆக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதை போல் திருமணத்தின் பொழுது பகையோனி இணைய கூடாது. இந்த அமைப்பு சபதம் எடுத்தது போல் வாழ்க்கையை தொலைத்து விடும்.

அதை போல் பெண் நட்சத்திரத்திற்கு ஏழாவது நட்சத்திரத்தில் இருக்கக்கூடிய ஆண் மணமகனை சேர்க்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் திருமணத்தில் இணையும் பொழுது தினம் தினம் அவர்கள் வாழ்க்கையில் போராட்டம் நிறைந்ததாகவே இருக்கும்.

அதேபோல் பெண் நட்சத்திரத்திற்கு 12-வது மற்றும் 17வது நட்சத்திரத்தில் பிறந்த ஆணுடன் சேர்க்கக்கூடாது. இது வாழ்க்கையில் மிகப் பெரிய அளவில் துன்பத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். அதேபோல் பெண் நட்சத்திரத்திற்கு 22 வது நட்சத்திர ஆணுடன் திருமணம் செய்து சேர்க்கக் கூடாது.

திருமண பொருத்தத்தின் பொழுது நாம் கட்டாயம் கவனிக்கவேண்டியவை | Things Should Check In Horoscope Before Wedding

ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால் குடிசையில் பிறந்தாலும் கோடீஸ்வரர் ஆவார்களாம்

ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால் குடிசையில் பிறந்தாலும் கோடீஸ்வரர் ஆவார்களாம்

இவை அந்தப் பெண்ணை விதவையாக இருக்கக்கூடிய நிலையில் கொடுக்க கூடும். இவை எல்லாம் ஜாதக ரீதியாக கணித்து சொல்லக்கூடிய ஒரு விஷயமே தவிர்த்து மனப்பொருத்தம் இருந்தால் நிச்சயம் வாழ்க்கை வளமானதாக மாறும்.

அதைவிட முக்கியமாக தொடர்ந்து இறைவழிபாடும் நல்ல செயல்களும் சிந்தனைகளில் ஈடுபட்டு வரும்பொழுது எவ்வளவு பெரிய துன்பம் நேர இருந்தாலும் அந்த நேரத்தில் கடவுள் நம்மை காப்பாற்றுவார். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US