வாஸ்துபடி எந்த பொருட்களை பிறருக்கு பரிசாக கொடுக்கலாம்
நமக்கு பிடித்த நபர்களுக்கு நமக்கும் அவர்களுக்கும் பிடித்த பொருட்களை பரிசாக கொடுத்து அவர்களை மகிழ்ச்சி படுத்தவேண்டும் என்று நினைப்போம்.அன்பு ஒரு புறம் இருந்தாலும்,சில பொருட்களை தெரியாமல் கொடுப்பதால் அந்த அன்பையே முறிக்கும் என்கிறார்கள்.
ஆதலால் நாம் என்ன பரிசுகளை பிறருக்கு அன்பளிப்பாக கொடுத்தால் என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்
விநாயகர்
நாம் ஒருவருக்கு விநாயகரை பரிசாக கொடுக்க அவர்கள் வீட்டில் செல்வ வளம் பெருகும்.ஏன் என்றால் விநாயகர் தான் எல்லாம் வழிபாடுகளிலும் முழுமுதற் கடவுளாக வழிபட படுகிறார்.அப்படியாக அவரை நாம் ஒரு பரிசாக கொடுக்க அவர்கள் வாழ்க்கையில் எல்லாம் வளமும் பெற்று சந்தோஷமாக இருப்பார்கள்.நமக்கு புண்ணியம் சேரும் என்கிறது சாஸ்திரம்.
படிக தாமரை
வாஸ்து சாஸ்திரப்படி தாமரைக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அதில் படிக தாமரை அமைதி மற்றும் செழிப்பின் சின்னமாக கருதப்படுகிறது.ஒருவர் வீட்டில் படிக தாமரை வைக்க அவர்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை நிர்ப்பச்செய்யும்.இதை ஒருவருக்கு பரிசாக வழங்கும் பொழுது நிதி நிலைமையை சரி செய்யும் என்று நம்பப்படுகிறது.
வாஸ்து யந்திரம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி வாஸ்து யந்திரம் வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை நீக்குகிறது. நேர்மறை ஆற்றலை ஈர்க்கிறது. வாஸ்து தோஷங்களை நீக்குவதற்கும் வாஸ்து யந்திரம் பயன்படுகிறது. வீட்டில் வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைப்பது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் பொருளாதார செழிப்பையும் தருவதாக கூறப்படுகிறது.
யானை ஜோடி
அடுத்ததாக யானை மகிழ்ச்சி, செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதப்படுகிறது. ஒருவருக்கு ஒரு ஜோடி யானைகளை பரிசாக கொடுப்பது வாஸ்து படி மிகவும் மங்களகரமானது. வெள்ளி, பித்தளை அல்லது மரத்தால் செய்யப்பட்ட ஒரு ஜோடி யானைகளை கொடுப்பது மிகவும் புண்ணியமாகும். இப்படி செய்தால் இல்லம் செழிக்கும். மகிழ்ச்சி பெருகும்.
குழந்தைகள் இல்லாமல் தவிப்பவர்களுக்கு ஒரு ஜோடி யானையை பரிசாக கொடுப்பதின் மூலம் அவர்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. நம் வீடுகளில் ஒரு ஜோடி யானை சிலைகளை வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் வைக்கலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |