வீட்டில் பூஜை செய்யும் பொழுது நாம் செய்யக்கூடாது தவறுகள்
நம்முடைய வீடுகளில் பூஜை செய்வது என்பது மிக அவசியமான ஒன்று.அவ்வாறு பூஜை செய்து விளக்கு ஏற்றினால் தான் வீட்டில் செல்வம் வளம் பெருகும்.அப்படியாக பலரும் பூஜை செய்யும் பொழுது தெரியாமல் சில தவறுகளை செய்து விடுகின்றனர்.அவ்வாறு நாம் விளக்கு ஏற்றும் பொழுது மறந்தும் செய்ய கூடாத தவறுகளை பற்றி பார்ப்போம்.
பொதுவாக நம் வீடுகளில் மாலை 5:36 மணி முதல் 6:00 மணிக்குள்ளாக விளக்கை ஏற்ற வேண்டும். அதேபோல, ராகு, குளிகை, எமகண்டம் தவிர்த்து தீபம் ஏற்றலாம்.ஆனால் நாம் ஏற்றிய விளக்கை ஒரு பொழுதும் 90 நிமிடங்களுக்கு மேல் எரிய விக்கூடாது.சிலர் 6 மணிக்கு மேல் தான் விளக்கு ஏற்றுவார்கள்.
அவ்வாறு ஏற்றும் பொழுது நாம் ஏற்றிய விளக்கை 7.30 மணிக்குள் குளிர வைத்து விடவேண்டும். அதே போல் நாம் ஈரத்துணியுடன் ஒரு போதும் விளக்கு ஏற்ற கூடாது.அதாவது பெற்றோருக்கு செய்யும் ஈமச்சடங்கிற்கு மட்டுமே, ஈரம் தோய்ந்த ஆடைகளுடன் வழிபாடு செய்வார்கள்.
இறை வழிபாட்டிற்கு, ஈரத்துடன் செய்யக்கூடாது.நாம் தினமும் மாலை விளக்கு ஏற்றும் வேளையில் வீடு முழவதும் வெள்ளிச்சாமாக இருக்கவேண்டும்.
முன் வாசல் தொடங்கி பின் வாசல் வரை வெளிச்சம் கட்டாயம் இருக்க வேண்டும்.அப்பொழுது தான் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் உருவாகும்.இவ்வாறு சிறு சிறு விஷயங்கள் நாம் கடைபிடித்தாலே நாம் நிறைவாக பூஜை செய்த பலன் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |