உங்கள் கஷ்டம் இன்றே விலக கோயிலுக்கு இந்த 4 பொருட்களை தானங்கள் செய்யுங்கள்
கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது எப்பொழுதும் நல்ல மாற்றத்தை கொடுக்கக்கூடும். அப்படியாக நாம் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யும் பொழுது குறிப்பிட்டு சில பொருட்களை தானம் செய்வதால் நிச்சயம் வாழ்க்கையில் நல்ல மாற்றம் கிடைக்கும் என்கிறார்கள்.
அந்த வகையில் ஒருவர் தங்களுடைய வாழ்க்கையில் சந்திக்கின்ற கஷ்டங்கள் யாவும் விலகி ஒரு நிம்மதியான வாழ்க்கையை பெறுவதற்கு கோவிலுக்கு செய்ய வேண்டிய முக்கியமான 4 தானங்களை பற்றி பார்ப்போம்.

1.கற்பூரம்:
இந்து மதத்தில் கற்பூரம் ஏற்றாத எந்த ஒரு வழிபாடுகளையும் நாம் பார்க்க முடியாது., காரணம் இந்த கற்பூரமானது நம்மை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலையும் தீய சக்திகளையும் மொத்தமாக விலக்கி நமக்கு ஒரு நல்ல தெளிவான மனநிலையை கொடுக்கக் கூடியது. அதனால் கோவிலுக்கு கற்பூரம் தானம் கொடுத்தால் நிச்சயம் நம் வாழ்க்கையில் சந்திக்கின்ற தீய ஆற்றல்கள் விலகிவிடும்.
2. விளக்கு:
விளக்கு எரிகின்ற வீடுகளில் இருள் சூழாது, துன்பம் நெருங்காது என்பது காலம் காலமாக நம்முடைய பெரியவர்கள் சொல்லி வருவது ஐதீகம். அப்படியாக ஒருவர் தங்களுடைய வாழ்க்கையில் இறைவழிபாடுகளில் விளக்கேற்றி வழிபாடு செய்வதை தொடர்ந்து நடைமுறையில் கொண்டு வந்து விட்டார்கள் என்றால் நிச்சயம் எப்பேர்ப்பட்ட தோஷமும் விலகிவிடும். அதனால் கோவிலுக்கு விளக்கு தானம் செய்வதால் நம் குடும்பத்தில் ஏற்படுகின்ற சண்டை சச்சரவுகள் விலகி மன ஒற்றுமை அதிகரிக்கும்.

3. அன்னதானம்:
கோவில்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய முக்கியமான தானங்களில் அன்னதானம் ஒன்று. இந்த உலகத்தில் கொடிய நோய் பசி. அதனால் உணவின்றி பசியால் வாடுபவர்களுக்கு மனதார அன்னதானம் செய்ய கோவில்களுக்கு நன்கொடை வழங்கலாம் அல்லது நாமே சமைத்து கோவில்களில் அன்னதானம் கொடுக்கலாம்.
இவ்வாறு செய்யும் பொழுது நிச்சயம் அவர்கள் வீடுகளில் குழந்தை பிறப்பதில் பாதிப்புகள், பூர்வீக தொடர்பான சொத்துக்களில் பிரச்சனைகள் போன்றவை விலகும்.
4. குங்குமம்:
உங்கள் வீடுகளில் தொடர்ந்து அடுத்தடுத்து குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடல் நலனில் சில ஆரோக்கிய குறைபாடுகள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்றால் நிச்சயம் நீங்கள் கோவிலுக்கு குங்குமம் தானமாக வழங்கலாம் அல்லது குங்குமம் அர்ச்சனை செய்வதற்கான ஏற்பாடுகளை நீங்கள் செய்யலாம். இவ்வாறு செய்யும் பொழுது குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் இருப்பார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |