சபரிமலை செல்லும் பொழுது நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்
காலம் காலமாக ஐயப்பனுக்கு விரதம் இருந்து மாலை அணியும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். ஐயப்பனை நினைத்து ஒரு வேண்டுதல் வைக்க கட்டாயம் அது நிறைவேறும் என்பது ஐதீகம். ஆனால், ஐயப்பனுக்கு மாலை அணிந்து செல்வது என்பது சாதரண விஷயம் அல்ல.
அதற்காக நாம் தீவிரமாக விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும். அப்படியாக, சினிமா துறையில் தனுக்கு என்று நீங்கா இடம் பிடித்தவர் நம்பியார் அவர்கள். அவருடைய நடிப்பால் பல கோடி மக்களின் மனம் கவர்ந்தவர்.
திரையில் வில்லனாக காட்சி கொடுத்தாலும், அவர் நிஜ வாழ்வில் மிக பெரிய ஐயப்ப பக்தர் ஆவார். அவர் ஐயப்பனை காண சுமார் 300 முறை மலைக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்து வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவர் மலைக்கு செல்லும் பொழுது அவர் மட்டும் அல்லாமல் பல முக்கிய சினிமா பிரபலங்களும் உடன் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அப்படியாக, அவர் ஐயப்ப பக்தராக வாழ்ந்த வாழ்க்கை எவ்வாறு அமைய பெற்று இருந்தது.
அவர் மலைக்கு செல்லும் வேளையில் அவர் சந்தித்த சுவாரசியங்கள் என்ன என்பதை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் நடிகர் நம்பியார் அவர்களின் பேரன் தீபக் நம்பியார் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |