அபிஷேகம் செய்யும் பால் நிறம் மாறும் அதிசயம் எங்கு தெரியுமா?
இந்த உலகம் ஒரு புரியாத புதிர் என்றே சொல்லலாம். நிமிடம் ஒரு முறை நமக்கும் மேல் ஒரு சக்தி இந்த பூமியை இயக்கி கொண்டு இருக்கிறது என்பதை தீர்க்கமாக நம்ப செய்கிறது. அப்படியாக, சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் பால் நிறம் மாறும் அதிசயம் ஒன்று நடக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
தமிழ்நாட்டில் கும்பகோணம் ஒரு ஆன்மீக பூமி என்று தான் சொல்ல வேண்டும். கும்பகோணத்தில் உள்ள ஒவ்வொரு கோயில்களும் சிறப்பு வாய்ந்த பரிகார தலமாக இருக்கிறது. அப்படியாக, கும்பகோணத்தில் உள்ள திருநாகேஸ்வரம் ஊரில் அமைந்துள்ளது நாகநாத சுவாமி கோவில்.
இக்கோயில் நவகிரகங்களான ராகு பகவானின் பரிகார தலம் ஆகும். அதோடு அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற புனித தலம் என்ற சிறப்புடையது. இந்தக் கோவிலில் ராகு பகவான் நாகவல்லி, நாககன்னிகள் என 2 மனைவிகளுடன் தனி சன்னிதியில் மங்கள குருவாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ராகு என்றால் மனிதத் தலையுடனும், பாம்பு உடலுடனும் காட்சி கொடுப்பவர். ஆனால், இந்த கோயிலில் ராகு பகவான் மனித வடிவில் காட்சி அளிப்பது சிறப்புக் கொண்டது. பொதுவாக, ராகு பகவானுக்கு மிகவும் பிடித்த நிறம் என்றால் அது நீலம்.
அதனால் ராகு பகவானுக்கு அணிகின்ற ஆடையும் நீல நிறத்தல் தான் அணிவிக்கப்படும். அது மட்டும் அல்லாமல், ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்யும் பொழுது அந்த பால் நீல நிறமாக மாறும் சிறப்பு இந்த கோவிலுக்கு உள்ளது.
ஜோதிடத்தில் ராகு பின்னோக்கிய பயணம் செய்யக்கூடியவர். இவர் இரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் ஒன்றரை வருடம் ஆகிறது. ராகுவால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோயிலுக்கு வந்து இத்தல இறைவனை வழிபாடு செய்ய அவர்களுக்கு ஏற்பட்ட தோஷம் எல்லாம் விலகும்.
அதோடு வாழ்க்கையில் மிக முக்கிய நிகழ்வுகளில் தாமதத்தை சந்திப்பவர்கள் ராகு தசை, ராகு புத்திக் காலத்தில் ராகு பகவானுக்கு பாலாபிஷேகம், அர்ச்சனை, ஹோமம் செய்து வழிபாடுகள் செய்தால் அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கும் என்பது கோவிலின் ஐதீகமாக உள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |