நம் வாழ்க்கையில் தவிர்க்கவேண்டிய முக்கியமான 10 விஷயங்கள்
நம்முடைய வாழ்க்கை சிறப்பாகவும் அமைதியாகவும் வாழ ஒரு சில முக்கியமான பத்து விஷயங்களை கடைபிடிக்கவேண்டி உள்ளது.அதை பின்பற்றினாலே துயரம் என்ற ஒரு கொடிய நோயில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ளமுடியும்.அதை பற்றி பார்ப்போம்.
பிற வாட மனம் பொறுக்காமல் நாம் தர்மம் செய்வது உண்டு.ஆனால் நாம் வெறுங்கையாகும் அளவிற்கு தர்மம் செய்யக்கூடாது.
மனிதனாக பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் கோபம் வருவது இயல்பு.அப்படியாக நமக்கு கோபம் வரும் பொழுது முகம் சிவக்கும் அளவிற்கு கோபம் கொள்ளக்கூடாது.
வாழ்க்கை ஓட்டத்தில் போட்டி பொறாமை இருக்கும்.அப்படி இருக்க நாம் பாவங்கள் செய்து குறுக்கு வழிக்கு சென்று வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.ஆக உடலுக்கும் மனதிற்கும் ஆபத்தான பொறாமையை வளர்க்கக்கூடாது.
கோபங்களில் வார்த்தைகளை நாம் பேசுவதுண்டு.ஆனால் பிறர் மனம் வலிக்குமளவிற்கு வார்த்தையை சொல்லிவிடக்கூடாது.
அன்பு என்றால் ஒரு பக்கமும் கொடுத்து வாங்கவேண்டியது.ஆனால் அந்த அன்பு பிறரிடம் நம்மி அடிமையாகும் அளவிற்கு அன்பை செலுத்தக்கூடாது.
மன சலனம் என்று யாருக்கு தான் இருக்காது.இருந்தாலும் அதை சமாதானம் செய்வது தான் அழகு.அப்படியாக சண்டை உண்டாகுமளவிற்கு எந்த விவாதத்தையம் தொடரக்கூடாது.
இயல்புக்கு மீறிய,நம்முடைய தகுதிக்கு மீறி தாய் செய்தாலும் அது நம்மை கெடுத்துவிடும்.அப்படியாக அமைதியை கெடுக்குமளவிற்கு ஆசையை சேர்க்கக்கூடாது.
ஒருவரை பிடிக்கவில்லை என்றால் விலகிவிடவேண்டும்.அவர்களை பழிவாங்கும் அளவிற்குப் அந்த பகையை வளர்க்கக்கூடாது.
நம்முடைய செயல் நம்முடன் இருபவர்களுடைய மனம் வெறுக்கும் அளவிற்கு செயல்கள் செய்யக்கூடாது.
துன்பம் கஷ்டம் என்பது அனைவர்க்கும் உள்ளது தான்.ஆக கண்ணீர் வடியுமளவிற்கு கவலை அடையக்கூடாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |