பெண்கள் காலில் மெட்டியை மாற்ற உகந்த நாள் எது தெரியுமா?

By Sakthi Raj May 30, 2025 11:40 AM GMT
Report

 நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் திருமணம் ஆன பெண்கள் அவர்கள் காலில் மெட்டி அணியும் வழக்கம் உண்டு. இதில் இரு கால்களிலும் பெண்கள் மூன்று விரல்களில் மெட்டி அணிய விரும்புவார்கள்.

இவ்வாறு அணியும் பொழுது குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை. அப்படியாக, பெண்கள் மெட்டி அணியும் பொழுது சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். அதில் குறிப்பாக பெண்கள் ஒருபொழுதும் உடைந்த மெட்டியை அணியக்கூடாது.

பெண்கள் காலில் மெட்டியை மாற்ற உகந்த நாள் எது தெரியுமா? | Things We Should Careful Before Changing Toe Ring

இது அவர்களின் குடும்ப வாழ்க்கையை முற்றிலுமாக பாதிப்படைய செய்யும். மேலும், மெட்டியை மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏதேனும் முக்கிய பண்டிகை நாட்களில் மாற்றுவது நன்மை தரும்.

உங்கள் ஜாதகத்தில் கேது எங்கு இருக்கிறார்? வாழ்க்கை பலனை தெரிந்து கொள்ளுங்கள்

உங்கள் ஜாதகத்தில் கேது எங்கு இருக்கிறார்? வாழ்க்கை பலனை தெரிந்து கொள்ளுங்கள்

அதே போல் மெட்டியை மாற்றும் பொழுது சரியாக மதியம் 12 மணிக்கு முன்பாக மாற்றி விடவேண்டும். பெண்கள் எப்பொழுதும் அவர்கள் இருகால்களிலும் மெட்டி இருக்கிறதா என்பதை கவனித்துக்கொள்ள வேண்டும்.

அதோடு சாஸ்திர ரீதியாக பெண்கள் இருகால்களிலும் ஒரு மெட்டி மட்டுமே அணிவது சிறந்த பலனை கொடுக்கிறது என்கிறார்கள். இன்னும் முக்கியமாக ஒரு போதும் மெட்டியை தங்கத்தில் அணியக்கூடாது. அவை வெள்ளியில் மட்டுமே அணியவேண்டும்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US