மஹாசிவராத்திரி அன்று மறந்தும் செய்யக்கூடாத விஷயங்கள்
மாசி மகத்தில் வரும் மஹாசிவராத்திரி மிகவும் விசேஷமானவை அன்றைய நாளில் நாம் விரதம் இருந்து இறைவழிபாடு செய்வோம்.மேலும்,அன்றைய தினம் நாம் சிவபெருமான் ஆலயம் சென்று வழிபாடு செய்வதும் குலதெய்வம் ஆலயம் சென்று வழிபாடு செய்வதும் மிக சிறந்த மாற்றத்தை வழங்கும்.
அப்படியாக வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதி சிவராத்திரி அன்று நாம் எந்த விஷயங்கள் செய்யலாம்?எந்த விஷயங்கள் செய்யக்கூடாது? முடிந்தவர்கள் அன்றைய நாள் முழுவதும் விரதம் இருந்து இறைவழிபாடு செய்யலாம்.
உடல் உபாதைகள் இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனை கேட்டு விரதம் மேற்கொள்ளலாம்.அதோடுஅன்றைய தினம் சிவபெருமானை வழிபாடு செய்வதோடு சிவ புராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம் படிக்கலாம்.
அத்துடன் தேவாரம், திருவாசகம் மற்றும் சிவபெருமானுடைய மந்திரங்கள் சொல்லிக்கொண்டே இருப்பது நமக்கு சிறந்த பலன்களை கொடுக்கும்.மஹாசிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் எண்ணற்ற நன்மைகள் பெறலாம்.
ஆக அன்றைய தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வதால் நம்முடைய உடல் உபாதைகள் தீர்வதோடு மனமகிழ்ச்சி உண்டாகும்.மஹா சிவராத்திரி நாளில், விரதம் இருப்பதும் கண் விழிப்பதும் சிவதரிசனம் செய்வதும் அன்னதானம் செய்வதும் மிகுந்த புண்ணியங்களை நமக்கு சேர்க்கும். பாவங்களைப் போக்கும்.
இந்த மஹாசிவராத்திரி நன்னாளில் நாம் பிறரிடம் சண்டை போடுதல்,பொய் பேசுதல் போன்ற விஷயங்களில் ஈடுபடக்கூடாது.அதே போல் அன்றைய நாளில் நாம் மறந்தும் மாமிசம் போன்ற உணவுகள் சாப்பிடக்கூடாது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |