2026: நாளை புரட்டாசி மாதம் பிறக்கிறது.. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

By Sakthi Raj Sep 17, 2026 11:53 AM GMT
Report

தமிழ் மாதங்களில் ஆவணி மாதம் நிறைவடைந்து நாளை முதல் புரட்டாசி மாதம் துவங்குகிறது. பெருமாளுக்கு மிகவும் உகந்த இந்த புரட்டாசி மாதம் திருமலை திருப்பதி திருவேங்கடவனை நினைவுபடுத்தும் சிறப்பு வாய்ந்த காலமாகும்.

புரட்டாசி மாதத்தில் பெருமாளை நினைத்து விரதமிருந்து கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு பெருமாளுடைய பரிபூரண அருள் கிடைக்கிறது. அதேபோல், இந்த மாதத்தில் புதன் மற்றும் மகாவிஷ்ணுவை வழிபாடு செய்கின்ற பொழுது சனி, ராகு, கேது தொடர்பான தோஷங்கள் யாவும் விலகும்.

அதோடு, புதன் பகவான் தான் ஒருவருடைய அறிவு, கல்வி, புத்தி கூர்மைக்கு காரணியாக இருக்கிறார். அவரை வழிபாடு செய்கின்ற பொழுது அறிவு மேம்படுகிறது.

2026: நாளை புரட்டாசி மாதம் பிறக்கிறது.. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? | Things We Should Do And Dont On Puratasi Month

2500 ஆண்டு பழமையான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இவ்வளவு சிறப்புகள் நிறைந்ததா?

2500 ஆண்டு பழமையான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இவ்வளவு சிறப்புகள் நிறைந்ததா?

புரட்டாசி மாதத்தில் ஏன் சுபகாரியங்களை தவிர்க்கிறார்கள்:

புரட்டாசி மாதங்களில் நாம் பெரும்பாலும் சுப காரிய நிகழ்ச்சிகளை செய்வதில்லை. அதாவது, புதியதாக வீடு வாங்குதல், தொழில் அல்லது வியாபாரம் துவங்குதல் கிரகப்பிரவேசம் அல்லது புதுமனை திருவிழா நடத்துதல் ஆகியவை தவிர்க்கிறார்கள்.

இந்த மாதம் முழுவதும் பெருமாளுக்கு உகந்த மாதம் அவரையே நினைத்து அவருக்காக வழிபாடு செய்து அவரை நாம் நெருங்கக் கூடிய ஒரு அற்புதமான காலம் என்பதால் இதனை நாம் தவிர்க்கின்றோம்.

2026: நாளை புரட்டாசி மாதம் பிறக்கிறது.. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? | Things We Should Do And Dont On Puratasi Month

மீனாட்சி அம்மன் சன்னதி வாசலில் ஏன் கோபுரம் இல்லை?

மீனாட்சி அம்மன் சன்னதி வாசலில் ஏன் கோபுரம் இல்லை?

புரட்டாசியில் அசைவம் தவிர்க்க வேண்டும்:

புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்ப்பது அவசியம். காரணம், பெருமாள் வழிபாட்டிற்குரிய மாதம் ஒரு பக்கம் இருந்தாலும் பருவநிலை மற்றும் மழைக்காலத்தில் துவக்கம் மற்றும் உணவு பழக்கங்களில் கட்டுப்பாடு ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு உணவு முறைகளை எளிமையாக மாற்றுவதற்கு இது பின்பற்றப்படுகிறது.

புரட்டாசி சனிக்கிழமைகள்:

2026 ஆம் ஆண்டு புரட்டாசி கிழமைகள் விவரங்கள் பற்றி பார்ப்போம். செப்டம்பர் 19, செப்டம்பர் 26, அக்டோபர் 3, அக்டோபர் 10 , அக்டோபர் 17, ஆகிய தேதிகளில் வருகிறது. இந்த இடங்களில் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்வதுபிறவி பாலனைக் கொடுக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US