செவ்வாய்க்கிழமைகளில் தவறியும் இந்த விஷயங்களை மட்டும் செய்து விடாதீர்கள்

By Sakthi Raj Jun 16, 2026 06:11 AM GMT
Report

நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு சில குழப்பங்கள் இருக்கும். எந்த நாட்கள் என்ன செய்ய வேண்டும்? எந்த நாட்கள் என்ன செய்வதை தவிர்க்க வேண்டும் என்று. அப்படியாக, செவ்வாய்க்கிழமை நாம் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.

செவ்வாய்க்கிழமை செவ்வாய் பகவானுக்கு உரிய நாளாக இருக்கிறது. செவ்வாய்க்கு மங்களன், பூமி காரன் என்று பெயர் உண்டு. மேலும் செவ்வாய் என்ற பெயரில் மங்கலம் இருப்பதால் நிச்சயமாக அந்த நாளில் நாம் நல்ல செயல்களை துவங்கலாம். அதைப்போல், ஒரு வீடு கட்ட வேண்டும் என்றால் செவ்வாய் கிரகத்தின் அனுகூலம் நிச்சயம் இருக்க வேண்டும்.

செவ்வாய்க்கிழமைகளில் தவறியும் இந்த விஷயங்களை மட்டும் செய்து விடாதீர்கள் | Things We Should Do And Donts On Tuesday

மேலும், தமிழ் கடவுளான முருகப்பெருமான் செவ்வாய்க்கு உரியவர். இவரை வழிபாடு செய்து எந்த காரியங்களை தொடங்கினாலும் கட்டாயமாக வெற்றி உண்டு. கேரளா மக்கள் செவ்வாய்க்கிழமைகளில் திருமணம் நடத்துவதை நாம் பார்க்க முடிகிறது.

ஜாதகத்தில் குரு பார்வை யாருக்கு கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும் ?

ஜாதகத்தில் குரு பார்வை யாருக்கு கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும் ?

 

செவ்வாயையும் முருகப்பெருமானையும் பூமி தேவியையும் வழிபட்டு செவ்வாய்க்கிழமைகளில் மங்களப் பொருட்களை நாம் வாங்குகின்ற பொழுது அவை பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. அதோடு, எந்த தினமாக இருந்தாலும் அன்றைய தினம் பிரதமை, அஷ்டமி, நவமி திதிகள் வரும் நாட்களை தவிர்ப்பது நல்லது.

அந்த வகையில், செவ்வாய்க்கிழமையும் நாம் நல்ல காரியங்களை தொடங்குவதற்கு உகந்த நாள் தான். நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக செவ்வாய் இருக்கிறார். அதனால், செவ்வாய் கிழமை அன்று ஒருவர் மௌன விரதம் மேற்கொண்டால் அவர் யாகம் செய்த முழு பலன் பெறுவதாக சொல்லப்படுகிறது.

செவ்வாய்க்கிழமைகளில் தவறியும் இந்த விஷயங்களை மட்டும் செய்து விடாதீர்கள் | Things We Should Do And Donts On Tuesday

அதனால், செவ்வாய் கிழமை அன்று நாம் எந்த ஒரு விவாதத்திலும் ஈடுபடக் கூடாது. அவ்வாறு ஈடுபடும் பொழுது அவை நிச்சயம் தீமையில் முடியும். செவ்வாய் வேகமாக செயல்பட கூடியவர்.

ஆதலால், அன்றைய தினம் செய்யும் செயல்களில் அந்த வேகம் தொடரும் என்பதால் கடன் வாங்கியவர்கள் கடனை திரும்பி கொடுக்கும்பொழுது செவ்வாய்க்கிழமையில் கொடுத்தால் வெகு விரைவில் அந்த கடன் அடையும் என்பது நம்பிக்கை. அதேபோல், மீண்டும் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படாது என்றும் சொல்வது உண்டு.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US