நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தைப்பூசம் பற்றிய 10 விஷயங்கள்
முருகப்பெருமானுக்கு மிகவும் விஷேசமான தைப்பூசம் திருநாள் அன்று பல அற்புத நிகழ்வுகள் நடந்து இருக்கிறது.அன்றைய நாள் பலரும் அறிந்திடாத மேலும் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான 10 விஷயங்களை பற்றி பார்ப்போம்.
1.தைப்பூசம் என்பது முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் முக்கியமான திருவிழா ஆகும்.இவை நம்முடைய தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
2.தைப்பூசம் திருநாள் அன்று அனைத்து முருகன் கோயிலில் உள்ள முருகப்பெருமான் வீதி உலா வருவார்.
3.மேலும் ஆடல் நடராஜர் தைப்பூச திருநாள் அன்று தான் சிதம்பரத்தில் உமாதேவியுடன் ஆனந்த நடனம் ஆடி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார்.
4.முருக பெருமானுக்கு எத்தனையோ விரதங்கள் இருந்தாலும் தைப்பூசம் விரதம் தான் முதன்மையான விரதம் ஆகும்.
5.தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
6.தைப்பூசம் திருநாள் அன்று எந்த வேலை செய்தாலும் அவை வெற்றியில் முடியும் என்ற தீர்க்கமான நம்பிக்கை உண்டு.
7.தைப்பூசம் திருநாள் அன்று கணவன் மனைவி இருவருமாக சேர்ந்து சிவாலயம் சென்ற் வழிபாடு செய்தால் அவர்களுக்கு இடையே எந்த கருத்துவேறுபாடுகள் ஏற்படாமல் சிறப்பாக வாழ்வார்கள்.
8.தைப்பூசம் திருநாளில் தான் முருகப்பெருமான் வள்ளியை மணம் புரிந்து கொண்டான்.
9.சூரனை அழிக்கப் பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத்தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலாக மாற்றி அந்தச் சக்தி வேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம். இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது.
10.தைப்பூச திருநாளில் ஸ்ரீரங்கம், ரங்கநாதப் பெருமாள் தன் தங்கை சமயபுரத்தம்மனுக்கு சீர் வரிசைகள் கொடுப்பார். இதையட்டி சமயபுரத்தில் 10 நாட்கள் திருவிழாவும் அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடைபெறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |