வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு நாம் செய்யக்கூடாத 7 விஷயங்கள்
நம் வீடுகளில் விளக்கு ஏற்றுவது முக்கியமான விஷயம் ஆகும்.மேலும்,விளக்கு ஏற்றினால் லட்சுமி கடாக்ஷம் பெருகும்.அதே போல்,வீட்டில் விளக்கு ஏற்றுவதால் நம் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் விலகும்.அப்படியாக நம் வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு சில விஷயங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
1.பொதுவாக விளக்கு ஏற்றி அதை குளிர வைக்கும் வரை வீட்டில் உள்ள பின் கதவுகளை திறக்க கூடாது.
2.மேலும் ஒருவர் உறங்கி கொண்டு இருக்கும் வேளையில் நிச்சயம் விளக்கு ஏற்ற கூடாது.
3.விளக்கு ஏற்றிய பிறகு பூக்கள் பறிப்பதோ,வாழை இலை வெட்டுவதோ போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
4.அதே போல் மாலையில் விளக்கு ஏற்றிய பிறகு வீடு சுத்தம் செய்யுதல்,வீட்டை கழுவி விடுதல் போன்ற விஷயங்கள் செய்ய கூடாது.
5.பெண்கள் மாலை விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்கவோ, கடன்கொடுக்கவோ கூடாது.அதே போல் விளக்கு ஏற்றிய பிறகு தலை சீவக்கூடாது.
6.சிலர் விளக்கு ஏற்றிய பிறகு வீட்டு வாசலில் அமர்ந்து அக்கம் பக்கத்தினர் உடன் பேசிக்கொண்டு இருப்பார்கள்.அவ்வாறு வீட்டு வாசலில் அமரும் பொழுது வீட்டிற்குள் வரும் மஹாலக்ஷ்மியை தடுப்பது போல் இருக்கும்.
7.விளக்கு ஏற்றிய பிறகு யாரும் குளிக்க கூடாது.அதே போல் விளக்கு ஏற்றி உடனே அதை குளிர வைக்கவும் கூடாது.குடும்பமாக மாலை வேளையில் வெளியே செல்ல வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டால் கிளம்புவதற்கு வெகு நேரம் முன் விளக்கு ஏற்றி அதை குளிர வைத்து சிறிது நேரம் கழித்தே செல்ல வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |