நாம் மறந்தும் பிறரிடம் இருந்து வாங்க கூடாத 5 பொருட்கள்
நம்முடைய ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவர் வாழ்க்கைக்கு உகந்த முக்கியமான சில குறிப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.அதை பின் பற்றினால் நிச்சயம் நம்முடைய வாழ்க்கையில் சில எதிர்மறை சக்த்திகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
அப்படியாக நாம் ஒருபொழுதும் மறந்தும் குறிப்பிட்ட சில 5 பொருட்களை பிறரிடம் இருந்து கடன் வாங்க கூடாது என்று சொல்கிறார்கள்.வாங்கினால் நம் வீட்டில் எதிர்மறை ஆற்றல் உருவாகும்.அவை என்ன பொருட்கள் என்று பார்ப்போம்.
குடை:
குடை என்பது மிகவும் அவசியமான ஒன்று.நாம் ஒருவர் வீட்டிற்கு சென்று நமக்கு குடை அவசியமாக தேவை பட்டால் கட்டாயம் அவர்களிடம் வாங்கிய குடையை திரும்ப அவர்களிடமே கொடுத்து விடவேண்டும்.காரணம் ஒருவரிடம் குடை வாங்கி நம்முடைய வீட்டிற்கு எடுத்து வரும் பொழுது வீட்டில் நிதி நெருக்கடிகள் மற்றும் நம் கிரகங்களின் நிலை மோசமடையக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இரும்பு பொருட்கள்:
அதே போல் பிறர் வீட்டில் இருந்து இரும்பு பொருட்களை நாம் ஒரு பொழுதும் நம்முடைய வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது.ஒருவேளை நீங்கள் வேறு ஒருவரின் வீட்டிலிருந்து இரும்பு பொருளை உங்களது வீட்டிற்கு கொண்டு வரும்போது நீங்கள் அவர்களின் வீட்டில் இருந்து சனியை உங்கள் வீட்டிற்கு கொண்டு வருகிறீர்கள் என்று அர்த்தம்.அதனால் நம்முடைய வீட்டில் பணக்கஷ்டம்,நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
தளபாடங்கள்:
வாஸ்து சாஸ்திரப்படி பிறர் வீட்டில் இருந்து அவர்கள் பயன்படுத்திய தளபாடங்கள்:ஒரு போதும் நம் வீட்டிற்கு கொண்டு வர கூடாது.இவ்வாறு கொண்டு வரும் பொழுது அவர்கள் வீட்டில் ஏதேனும் எதிர்மறை ஆற்றல் சூழ்ந்து இருந்தால் அதையும் நம்முடன் கொண்டு வருவதற்கு சமம்.
காலியான பாத்திரங்கள்:
நாம் மறந்தும் ஒருவரது வீட்டில் இருந்து காலியான பாத்திரங்கள் எடுத்து வரக்கூடாது.அவ்வாறு எடுத்த வரவேண்டும் என்று நினைத்தால் அதில் பொருட்கள் நிரப்பி கொடுக்கவேண்டும்.காலியான பாத்திரம் கொடுத்து விட அவர்கள் வீட்டில் உள்ள செழிப்பு குறைந்து விடும்.
கேஸ் அடுப்பு:
நம் வீட்டில் முக்கிய பொருளாக விளங்குவது கேஸ் அடுப்பு.இதை மற்றொருவர் வீட்டில் இருந்து இங்கு எடுத்து வர நம் வீட்டிற்கு வரும் ஆசீர்வாதங்கள் குறைந்து விடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |