வாஸ்து: தவறியும் இந்த பொருட்களை திங்கட்கிழமை வாங்கி விடாதீர்கள்.. ஏன் தெரியுமா?
வாஸ்து என்பது நம் நடைமுறை வாழ்க்கையில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு அற்புதமான வழிகாட்டுதலாகும். அந்த வகையில் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு கிரகங்களுக்கும் மற்றும் இறைவனுக்கும் உரிய தினமாக இருக்கிறது.
அதனால் அந்தந்த தினங்களுக்கு உரிய விஷயங்களை அந்த நாளில் செய்யும் பொழுது தான் நமக்கு நன்மைகள் பல மடங்கு கிடைக்கிறது. அதேபோல் மறந்தும் சில விஷயங்களை நாம் ஒரு சில தினங்களில் செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள்.
அப்படியாக வாஸ்து ரீதியாக திங்கட்கிழமையன்று தவறியும் சில பொருட்களை வாங்கக்கூடாது என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

வாஸ்து ரீதியாக திங்கட்கிழமை அன்று நாம் ஒரு சில பொருட்களை வாங்கும் பொழுது அவை நமக்கு குடும்பத்தில் பிரச்சனையும், மன குழப்பத்தையும் உண்டு செய்யும் என்கிறார்கள். காரணம், திங்கட்கிழமை என்பது சந்திர பகவானுக்கு உரிய நாளாகும்.
இவர் தான் ஒரு மனிதனுடைய மனதிற்கு காரணமாக இருக்கக்கூடியவர், அதேபோல் மன அமைதியை கொடுக்கக்கூடியவர். ஆக இந்த நாளில் தவறுதலாக நாம் ஒரு சில பொருட்களை வாங்கும் பொழுது அவை நமக்கு மன நிம்மதியை இழக்க செய்யும் என்று சொல்கிறார்கள்.
அந்த வகையில் இரும்பு மற்றும் புது வண்டி வாகனங்களை நாம் திங்கட்கிழமை அன்று வாங்குவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் திங்கட்கிழமை தானிய வகைகள் மொத்தமாக வாங்குவதையும் தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இதனால் குடும்பத்தில் திடீர் என்று பொருளாதார நெருக்கடிகள் அல்லது குழப்பங்கள் உருவாக கூடும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், திங்கட்கிழமையில் அதிர்ஷ்டம் உண்டாக சந்திர பகவானுக்கு உரிய பொருட்களை வாங்கலாம்.
அதாவது பால் அல்லது பால் சார்ந்த பொருட்கள், அரிசி வெள்ளை நிறத்தில் ஆடைகள் வெள்ளி பொருட்கள், பவளம், பூக்கள், வாசனை நிறைந்த பொருட்களை போன்றவை திங்கட்கிழமையில் வாங்குவதால் நம்முடைய மனம் அமைதி பெறுவதோடு குடும்பத்திலும் ஒரு நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும் என்று சொல்லப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |