2026: மகா சிவராத்திரி அன்று தவறியும் செய்யக்கூடாத 8 விஷயங்கள்

By Sakthi Raj Feb 14, 2026 07:30 AM GMT
Report

 சிவபெருமான் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாக மகா சிவராத்திரி இருக்கிறது. மேலும் சிவபெருமானே தனக்கு பிடித்த நாளாக அன்னை பார்வதி தேவியிடம் மகா சிவராத்திரியை தெரிவித்திருப்பது இந்த நாளின் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

இந்த நாளில் பலரும் விரதம் இருந்து வழிபாடு மேற்கொள்வார்கள். முடிந்தவர்கள் முழு உபவாசம் இருக்கலாம். முடியாதவர்கள் ஒரு வேலை உணவுடன் விரதத்தை மேற்கொள்ளலாம். விரதம் இருப்பவர்கள் கட்டாயம் சிவபெருமானுடைய மந்திரங்கள் சிவ அஷ்டோத்திரம் மற்றும் சிவ துதிகளை சொல்லி வில்வ இலைகளாலும் பூக்களாலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

மகா சிவராத்திரி சிறப்பே இரவு முழுதும் விழித்திருந்து சிவபெருமானை வழிபாடு செய்வதுதான். அவ்வாறு இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு செய்ய முடியாதவர்கள் அர்த்த ஜாம பூஜையில் ஆவது விழித்திருந்து வழிபாடு செய்ய வேண்டும்.

2026: மகா சிவராத்திரி அன்று தவறியும் செய்யக்கூடாத 8 விஷயங்கள் | Things We Shouldnt Do On Maha Sivarathiri Worship

உங்கள் ஜாதகத்தில் சிவபெருமான் அருள் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?

உங்கள் ஜாதகத்தில் சிவபெருமான் அருள் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?

சிவபுராணம் படிப்பதும் நமக்கு மிகச் சிறந்த நன்மையை அளிக்கும். அப்படியாக மகா சிவராத்திரி அன்று குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் நாம் தவிர்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

1. மகாசிவராத்திரி தினத்தன்று விரதம் இருப்பவர்கள் உணவில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்ப்பதை தவிர்த்து விட வேண்டும்.

2. அசைவ உணவு, மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

3. இந்த நாளில் முடிந்தவரை யாரிடமும் பகைமையும் தேவையில்லாத வார்த்தைகள் பயன்படுத்தாதீர்கள்.

4. இந்த நாளில் பிறரைப் பற்றி குறை சொல்வது போன்ற விஷயங்களில் ஈடுபடாதீர்கள்.

2026: மகா சிவராத்திரி அன்று தவறியும் செய்யக்கூடாத 8 விஷயங்கள் | Things We Shouldnt Do On Maha Sivarathiri Worship

2026: லட்சுமி நாராயாண யோகம்.. அதிர்ஷ்டம் பெறப்போகும் முக்கியமான ராசிகள்

2026: லட்சுமி நாராயாண யோகம்.. அதிர்ஷ்டம் பெறப்போகும் முக்கியமான ராசிகள்

5. மகா சிவராத்திரி அன்று இரவு நேரம் விழித்திருப்பது என்பது வழிபாடு செய்வதற்காக மட்டுமே தவிர அந்த நேரத்தை நாம் பொழுது போக்குக்காக விரதம் என்கின்ற பெயரில் சினிமா போன்றவற்றை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

6. இந்த நாளில் விரதம் மேற்கொள்வதால் உடலை வருத்தக்கூடிய கடுமையான வேலைகளை தவிர்த்து விடுங்கள்.

7. வழிபாட்டின் பொழுது கருப்பு நிற ஆடைகளை தவிர்த்து விடலாம்.

8. இந்த நாளில் மனதில் தீய எண்ணங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US