மறந்தும் பழைய காலண்டரை இப்படி பயன்படுத்தாதீர்கள்
நாம் வீட்டில் எப்பொழுதும் தேவை இல்லாத பொருட்களை உடனுக்குடன் கழித்த விடவேண்டும்.அவ்வாறு செய்யும் பொழுது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் விலகும்.அப்படியாக அனைவருடைய வீட்டிலும் கிழமைகள்,விஷேச நிகழ்வுகள் பார்க்க வருடாவருடம் ஒரு புது காலண்டரை வாங்குவோம்.
சிலர் புது வருடம் பிறந்த உடன் பழைய காலண்டரை மறக்காமல் கழித்து விடுவார்கள்.இன்னும் சிலர் அதை வேறு விதமாக பயன்படுத்துவதை பார்க்க முடியும்.அப்படியாக நாம் வீட்டில் மறந்தும் பழைய காலண்டரை இவ்வாறு பயன்படுத்த கூடாது.அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
பொதுவாக கடந்த காலம் என்பது முடிவடைந்தது.அதில் நன்மை தீமை என்று இரண்டும் சந்தித்து இருப்போம். அப்படியாக அதில் நாம் கற்றுக்கொண்ட பாடத்தை எடுத்து கொண்டு மற்ற நிகழ்வுகளை மறந்து விடவேண்டும்.
அப்பொழுது தான் மனம் சந்தோஷமாக இருக்கும்.அதே போல் தான் காலண்டரும்,நாட்கள் முடிந்து விட்டது அதை மீண்டும் வீட்டில் வைத்திருப்பது பலவகையான சிக்கல்கள்,எதிர்மறை எண்ணங்கள் போன்ற சூழ்நிலைகளை உருவாக்கி விடும்.
புது வ்ருடம் காலண்டர் மாற்றும் பொழுது சிலர் பழைய காலண்டரில் உள்ள சுவாமி படம் அழகாக உள்ளது என்று அதை அங்கேயே மாட்டி வைத்திருப்பார்கள்.இன்னும் சிலர் பழைய காலண்டர் மேல் புது காலண்டரை மாட்டி வைப்பார்கள்.
இவ்வாறு கட்டாயம் செய்யக்கூடாது.அவை நம்முடைய எதிர்கால முன்னேற்றத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக அமைந்து விடும்.அதனால் கிழிந்த காலண்டர் மற்றும் பழைய காலண்டரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
மேலும் பழைய காலண்டரில் உள்ள சுவாமி படங்கள் இருந்தால் அதை மட்டும் தனியாக வெட்டி எடுத்து வைத்து கொள்ளலாம்.பிறகு முடிந்தவர்கள் அதற்கு ப்ரேம் செய்து மாட்டிக்கொள்ளலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |