வாஸ்து: தவறியும் வீடுகளில் இந்த 4 பொருட்களை மாட்டாதீர்கள்..
வாஸ்து என்பது மிகவும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. நம்முடைய வீடுகளில் என்னென்ன பொருட்களை வைத்திருக்கின்றோம் என்பது வரை நம்முடைய மனநிலையை அவை பாதிக்கிறது.
அந்த வகையில், வீடுகளில் மறந்தும் சுவற்றில் மாட்டகூடாத 4 பொருட்கள் இருக்கிறது. அதைப்பற்றி பார்ப்போம்.
வீட்டு சுவர்களில் மறந்தும் ஆயுதங்களை மாட்டவே கூடாது. இது வீடுகளில் பிரச்சனையையும் ஒரு நிம்மதியற்ற தன்மையையும் கொடுத்து விடும்.
வீடுகளில் போரை சித்தரிக்க கூடிய புகைப்படங்கள் மற்றும் சிற்பங்கள் சுவற்றில் மாட்டவே கூடாது.

இது எதிர்மறையான தாக்கங்களையும் குடும்பங்களில் பிரச்சனையையும் சண்டையையும் கொடுத்து விடும்.
அதேபோல், வீடுகளில் மிருகங்களில் வாயில் உணவுகளை வைத்திருக்கக் கூடிய புகைப்படத்தை வைக்கவேக்கூடாது. இவை நமக்கு ஒரு நல்ல அதிர்வலைகளை கொடுப்பதில்லை.
மான் தலை கொம்புடன் வீட்டு சுவரில் மாட்டி வைக்க கூடாது. இது ஒரு அமானுஷ்யமான சக்தியையும் ஒரு எதிர்மறை பாதிப்புகளையும் கொடுத்துவிடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |