வீட்டில் மங்களம் உண்டாக கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்கள்
Report this article
ஒரு மனிதனுக்கு குடும்பம் என்பது மிக முக்கியமான ஒன்று.அப்படியாக நம்முடைய குடும்பத்தில் மகிழ்ச்சி இருந்தால் மட்டுமே மன அமைதியும் உடல் ஆரோக்கியமும் பெற முடியும்.ஆனால் ஒரு சிலர் வீட்டில் என்னதான் சரியான முறையில் அவர்கள் பூஜை செய்து வழிபாடு செய்தாலும் தேவை இல்லாத சண்டைகள் பிரச்சனைகள்,உடல் உபாதைகள் ஏற்பட்டு கொண்டு இருக்கும்.
இவ்வாறான பிரச்சனைகள் உருவாகும் பொழுது நம் வீட்டில் செய்யவேண்டிய வழிபாட்டை பற்றி பார்ப்போம். தெய்வங்களில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக அம்பாள் விளங்குகிறாள்.ஆக பெண்கள் கட்டாயம் பிரச்சனை காலங்களில் செவ்வாய் வெள்ளைக்கிழமை அன்று அருகில் இருக்கும் அம்மன் ஆலயங்கள் சென்று அங்கு எலுமிச்சை பழம் தீபம் ஏற்றி வழிபட்டு வர நிச்சயம் நல்ல மாறுதலை காணமுடியும்.
அதே போல் குடும்பத்தில் தொடர்ந்து காரிய தடங்கல் ஏற்படும் பொழுது ஏதேனும் ஏழை பெண் பிள்ளைக்கு திருமணம் செய்ய பண உதவி அல்லது பொருள் உதவி செய்தால் வீட்டில் உள்ள காரிய தடங்கல் நிச்சயம் விலகும்.
மேலும்,இன்றைய கால சூழ்நிலையில் பலராலும் குடும்பமாக கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யமுடியவில்லை.அப்படியாக,கட்டாயம் கஷ்டங்கள் தீர அம்பாள் ஆலயம் சென்று அபிஷேகம் செய்வதற்கு தங்களால் முடிந்ததை செய்து அதை கண்குளிர பார்க்க கட்டாயம் உங்களுக்கு ஏற்பட்ட எதிர்மறை ஆற்றல் விலகும்.
அதே போல் காலம் மாற நாம் பழைய விஷயங்களை மறந்து வருகின்றோம்.அதில் பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிப்பது.மஞ்சளுக்கு எதிர்மறை சக்திகளை போக்கும் தன்மை உடையது.ஆக பெண்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமை அன்றாவது மஞ்சள் தேய்த்து குளித்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்யும் பொழுது வீட்டில் மங்களம் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |