அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர் முருகன் கோயில்.
அறுபடை வீடுகளில் கடல் ஓட்டி கோயில் அமைந்து உள்ள பெருமை இக்கோயிலுக்கே சேரும்.
முருகன் அவதரித்த நோக்கமே அசுரர்களை அளிப்பதற்காகத்தான்.அதன் நோக்கம் நிறைவேறியது திருச்செந்தூர் திருத்தலத்தில் தான்.
காவல் தெய்வமான வீரபாகுவின் பெயரால் இத்தலம் வீரபாகு பட்டினம் என்றும் அழைக்கப்படுகிறது. வீரபாகுவுக்கு பூஜை முடிந்த பின்னரே முருகனுக்கு பூஜை நடக்கும்.
கோயிலின் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இதன் முன்புள்ள சந்தனமலையில் குழைந்தை பாக்கியம் தாமதம் அகுபவர்கள் ,அப்பன் முருகனையும் வள்ளி அம்மாவையும் மனதில் நினைத்து தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கியும், சண்முகர் தெற்கு நோக்கியும் உள்ளனர்.
கூடுதல் விஷேசம் என்னவென்றால் பாலசுப்பிரமணியருக்கு வெள்ளை நிற ஆடையும், சண்முகருக்கு பச்சை நிற ஆடையும் அணிவிக்கின்றனர். மூலவருக்கு பின்புறம் சுரங்க அறையில் முருகன் வழிபட்ட பஞ்சலிங்கங்களை தரிசிக்கலாம்.
இந்த அறையை பாம்பறை என அழைக்கின்றனர். பிரணவ மந்திரமான 'ஓம்' எனும் வடிவில் திருச்செந்தூர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் ராஜகோபுரம் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
9 அடுக்குகளை கொண்ட இதன் உயரம் 157 அடி. 124 தூண்கள் கொண்ட சண்முக விலாசம் என்னும் மண்டபம் 120 அடி உயரம், 60 அடி அகலம் கொண்டது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |