திருமண வரமருளும் திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவில்

By பிரபா எஸ். ராஜேஷ் Feb 09, 2025 11:02 AM GMT
Report

இக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலம் என்ற ஊரில் அமைந்துள்ளது. திருவாரூரில் பிறந்தால் முக்தி! காசியில் இறந்தால் முக்தி! திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி! என்ற வரிசையில் திருச்சிற்றம்பலத்து மண்ணை விபூதியாக பூசிக் கொண்டாலே முக்தி! என்று சொல்லும் சிறப்பு மிகுந்த ஊர் திருச்சிற்றம்பலம் ஆகும். இக்கோயிலின் பழைய பெயர் திருச்சுற்றுஏமம் ஆகும். இங்கு மக்கள் செல்வாக்கு பெற்ற ஏமராசா கோயிலும் அருகில் உள்ளது.

திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில்

கருவறை நாதராக சுயம்புலிங்கமாக காட்சி தருபவர் புராதனவனேஸ்வரர் ஆவார். அம்மையின் பெயர் பெரிய நாயகி என்ற பிரக்தாம்பாள். இவள் பெயரால் இப்பகுதியில் வாழும் மக்கள் இக்கோயிலை குறிப்பிடுகின்றனர். இங்குக் கொடி மரம் கிடையாது. கொடிமரம் சாய்ந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. புதிய கொடிமரம் இன்னும் வைக்கப்படவில்லை. இக்கோவிலில் திருச்சுற்று மாளிகை காணப்படுவது தனிச்சிறப்பாகும்.  

திருமண வரமருளும் திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவில் | Thiruchitrambalam Puradhana Vaneswarar Temple

விநாயகர்கள்
திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில்

பூ விழுங்கி விநாயகரும் இரட்டை விநாயகரும் தனித்தனி சன்னதி கொண்டுள்ளனர். உள் பிரகாரத்தில் மகா கணபதிக்குத் தனிச் சன்னதி உள்ளது. இவர் தன் தும்பிக்கையை வடக்கு முகமாக வைத்து தலை சாய்த்துக் காட்சியளிக்கின்றார்.

திருச்சுற்றுத் தெய்வங்கள்

மற்ற சிவன் கோவில்களில் இருப்பது போலவே திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலிலும் வள்ளி தெய்வானை சமேதராய சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி சப்த கன்னியர், சண்டிகேஸ்வரர், லிங்கோத்பவர், துர்க்கை, பிரம்மன் சூரியன், சந்திரன் ஆகியோர் சிவன் சந்நிதி பிரகாரத்தில் உள்ளனர் இக்கோவிலில் உள்ள நடராஜர் அம்பலத்தாடுவார் என்று அழைக்கப்படுகின்றார்.

தீர்த்தக்குளங்கள்

புராதனவனேஸ்வரர் கோவிலின் அருகிலும் எதிரிலும் இரண்டு தாமரை குளங்கள் நல்ல நிலையில் உள்ளன.

சிவபெருமான் வரலாறும் வழிபாடும்

சிவபெருமான் வரலாறும் வழிபாடும்

திருச்சுற்று ஏமம்

திருச்சிற்றம்பலம் என்ற இத்திருத்தலத்தின் பழைய பெயர் திருச்சிற்றேமம் என்பதைக் கல்வெட்டுக்களும் திருஞானசம்பந்தரின் பதிகமும் உறுதி செய்கின்றன. இக்கோயில் ஏமனின் பெயரால் முன்பு திருச்சுற்று ஏமம் என்று அழைக்கப்பட்டுள்ளது. சிவன் கோயிலான் பிறகு அம்பலத்தாடுவான் பெயரில் திருச்சுற்று அம்பலம் என்று மாறியுள்ளது 

கல்வெட்டுகள்

திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவில் 1300 ஆண்டுகள் பழையதாகும். கிபி ஒன்பதாம் நூற்றாண்டு முதல் சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள் காலத்துக் கல்வெட்டுக்கள் இக்கோவிலில் காணப்படுகின்றன. அவற்றுள் இரண்டாம் வரகுண பாண்டியன் கல்வெட்டு கி.பி. 878 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. இக் கல்வெட்டில் இவ் ஊரின் பெயர் திருச்சிற்றேமம் என்று குறிப்பிட்டுள்ளது.

திருச்சுற்று அம்பலம் என்று குறிப்பிடப்படவில்லை. கி.பி. 936 ஆம் ஆண்டைச் சேர்ந்த முதலாம் பராந்தகச் சோழனின் கல்வெட்டும் கல்வெட்டிலும் திருச்சிற்றேமத்து மகாதேவர் என்ற குறிப்புக் காணப்படுகின்றது. பராந்தகச் சோழனின் மற்றொரு கல்வெட்டில் நக்கநாச்சி என்ற தன் மகளின் சார்பாக கோவிலுக்கு சாவா மூவா பேராடுகள் 91 தானமாகக் கொடுத்த தகவல் உள்ளது.

சாவா மூவா பேராடுகள் என்றால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆடுகளை வாங்கி கோவிலுக்குத் தானமாகக் கொடுத்து விட்டால் அவை புதிது புதிதாகக் குட்டிகளை ஈனும் போது அவற்றின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகும். இதனால் மூப்படைந்து இறந்து போன ஆடுகள் பற்றி கவலைப்பட வேண்டாம். புதிய ஆடுகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வரும்.

திருமண வரமருளும் திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவில் | Thiruchitrambalam Puradhana Vaneswarar Temple 

கிபி 995இல் பொறிக்கப்பட்ட முதலாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டில் இறைவனுக்கு திரு அமுது படைக்க நிலம் வழங்கிய செய்தி காணப்படுகின்றது. அடுத்ததாக வாழ்வூரைச் சேர்ந்த உத்தமன் என்பவன் இறைவனுக்கு திருவமுது படைக்க நிலம் நிலம் அளித்துள்ளான். கிபி 1096 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ராஜேந்திரச் சோழன் காலத்து கல்வெட்டில் அந்தி விளக்கு ஏற்றுவதற்கு மன்னன் அளித்த உதவி குறிப்பிடப்பட்டுள்ளது.

கிபி 1216 ஆம் ஆண்டு முதலாம் மானவர்ம சுந்தரபாண்டியன் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டில் கருவறை நாதருக்குத் தேவதானமாக 100 பணத்திற்கு சாமந்த மழவராயன் என்பவன் நிலம் விற்ற செய்தி காணப்படுகின்றது.

கிபி 1253 ஆம் ஆண்டில் மூன்றாம் ராஜராஜன் சோழனின் கல்வெட்டில் திருச்சிற்றைமம் குளத்திற்குத் தண்ணீர் கொண்டு வர வாய்க்கால் வெட்டுவதற்காக நிலம் வழங்கிய தகவலும் மற்றொரு கல்வெட்டில் அம்மனுக்கு அமுது படைக்க நிலம் வழங்கிய தகவலும் காணப்படுகின்றது.ஒரு கல்வெட்டில் குலோத்துங்கச் சோழனை மலை மண்டலத்து குல முக்கிலைச் சேர்ந்த குதிரை வியாபாரி என்று குறிப்பிட்டுள்ளனர்.

திருமணச் சிறப்புத் தலம் திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் திருமணம் காதுகுத்து நிச்சயதார்த்தம் போன்ற சுப காரியங்கள் நிறைய நடைபெறுகின்றன. முகூர்த்த நாட்களில் சுமார் 200 திருமணங்கள் வரை நடைபெறுகின்றன. ஆடி மாதத்திலும் மார்கழி மாதத்திலும் சுப காரியங்கள் நடைபெறுவதில்லை.

மற்ற 10 மாதங்களிலும் இந்த கோவில் சுபகாரியத்துக்கு வந்த கூட்டம் அதிக எண்ணிக்கையில் இருப்பதைப் பார்க்கலாம். திருச்சிற்றம்பலம் பெயர் மகிமை மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல திருவாசகத்தை சிவபெருமான் எழுதினார். திருவாசகத்தை இறைவன் எழுதி முடித்தவுடன் அவர் கீழே திருச்சிற்றம்பலம் உடையான் என்று கையெழுத்திட்டார்.

இதனால் இறைவனின் திருநாமம் திருச்சிற்றம்பலம் உடையான் எதாகும். எனவே இன்றைக்கும் சிவபெருமானைத் துதிக்கும் முன்பு திருச்சிற்றம்பலம் என்று சொல்லி துதிக்கின்றனர். முடிக்கும் போதும் திருச்சிற்றம்பலம் என்று சொல்லியே முடிக்கின்றனர். அத்தகைய சிவ பக்தி நிறைந்த சொல் இவ்வூரின் பெயராக அமைந்திருப்பது தனிச் சிறப்பு வாய்ந்ததாகும். 

திருமண வரமருளும் திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவில் | Thiruchitrambalam Puradhana Vaneswarar Temple

எமதர்மன் கோயில்

திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் சிவ தரிசனம் முடித்து சிறிது தொலைவு நடந்து சென்றால் அங்கு எமதர்மனுக்கு என்று தனிக் கோயில் இருப்பதை பார்க்கலாம். எமதர்மன் வலது காலை மடக்கி இடது காலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளார். அவரது நான்கு கைகளில் பாசக்கயிறு, சூலாயுதம், மந்திரக்கோல், ஓலைச்சுவடி தாங்கி இருக்கின்றார்.

எமகண்ட நேரத்தில் எமதர்மனுக்கு சிறப்புப் பூஜைகள் செய்து வந்தால் எம பயம் தீரும். ஆயுள் தோஷம் விலகும். ஆயுள் விருத்தியாகும். பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேரவும் கண்டச் சனி நடப்போருக்கு கண்டங்கள் உண்டாகாமல் இருக்கவும் இச்சன்னதியில் சிறப்புப் பூசைகள் நடைபெறுகின்றன. சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலாக எமதர்மராஜாவை இங்கு மக்கள் வணங்கி வருகின்றனர்.

இடிந்து கிடந்த இக்கோயிலை அண்மையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மூன்று கோடி ரூபாய் செலவில் எமதர்மருக்குத் தனிக் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலுக்குள் ஆறடி உயரத்தில் எருமை வாகனத்தின் மீது முறுக்கிய மீசையுடன் எமதர்மன் காட்சியளிக்கின்றார்.

இக்கோவில் ஆதியில் போதி தர்மர் கோயிலாக இருந்து பின்னர் தர்மராஜா கோயிலாகி அதற்கடுத்த காலகட்டத்தில் எமதர்மராஜா கோவிலாக மாறியிருக்கும். பெயருக்கு ஏற்ப எமதர்மராஜா சிலையும் புதிதாக வைக்கப்பட்டுள்ளது.  

பைரவர் பூஜை அதிக பலன் தர நாம் செய்ய வேண்டியவை

பைரவர் பூஜை அதிக பலன் தர நாம் செய்ய வேண்டியவை

கதை

எமதர்மராஜா என்ற பெயர் மாற்றம் பெறும்போது அதற்கென்று ஒரு கதையும் உருவாக வேண்டியது அவசியமாகின்றது. எனவே இக்கதை தோன்றியுள்ளது. இக்கோயிலை இப்பகுதி மக்கள் பெரியநாயகியின் பெயரால் தான் அழைக்கின்றனர். எனவே கதையில் பெரியநாயகியும் முக்கிய இடத்தை பெறுகிறார். அவளது பெயரும் சம்ஸ்கிருதப் பெயராகிவிட்டது. பிரகதாம்பாள் (பெரியநாயகி) என்ற சிறுமியை எமதர்மராஜாவிடம் ஒப்படைத்த சிவபெருமான் இப்பெண்ணை பூலோகத்திற்கு அழைத்துக் கொண்டு போ என்றார்.

இப் பெண் குழந்தை வளர்ந்த பிறகு அவளை சிவபெருமானுக்கே (தனக்கு) திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார். ஒரு நாள் திருச்சிற்றம்பலத்தில் உள்ள கானாங்குளத்தில் அச்சிறுமி குளித்துக் கொண்டிருந்தபோது பருவம் எய்தினாள்.

உடனே முப்பத்து முக்கோடி தேவர்களும் சேர்ந்து வந்து பிரகதாம்பாள் என்ற பெரியநாயகியை சிவபெருமானுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.ஆனால் அவ்வேளையில் சிவபெருமான் யோக நிஷையில் இருந்தார்.

திருமண வரமருளும் திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவில் | Thiruchitrambalam Puradhana Vaneswarar Temple

மலரம்பு எய்த மன்மதன்

சிவபெருமானின் யோகநிஷ்டையைக் (தவத்தை) கலைக்க என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த தேவர்கள் மன்மதனை அணுகி உதவி கேட்டனர்.

மன்மதனும் சிவபெருமானுக்கு காதல் உணர்வு தோன்றுவதற்காக தன்னுடைய தாமரை,அசோகம், குவளை, மாம்பூ, முல்லை ஆகிய மலர் அம்புகளை அவர் மீது எய்தான். சிவபெருமான் விழித்து கோபத்தில் மன்மதனை நோக்க அவருடைய நெற்றிக்கண்ணின் உக்கிரத்தால் மன்மதன் எரிந்து சாம்பலானான். 

ஊர்களும் வரலாறும்

மன்மதன் அம்பு விட்ட இடம் மதமட்டூர் என்ற பெயரில் சிற்றம்பலத்திற்கு அருகே உள்ளது. அவன் அம்பு விடுவதற்காக ஐந்து பூக்களைப் பறித்த பூவனம் என்ற ஊரும் அதற்கு அருகில் உள்ளது. ரதி தேவி மன்மதனை உயிர்ப்பிக்கும்படி சிவபெருமானிடம் கெஞ்சினாள். ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி அவனை உயிர்ப்பித்து அவள் கண்களுக்கு மட்டுமே தெரிவான என்றார்.

திரிசதம் சொல்லும் பவளமலை முருகன் கோவில்

திரிசதம் சொல்லும் பவளமலை முருகன் கோவில்

காமன் பண்டிகை

சைவ பேரெழுச்சிக்குப் பின்பு காமன் பண்டிகை தமிழகத்தில் மாசி பௌர்ணமி அன்று பல ஊர்களில் காமண்டி, காம தகனம் என்ற பெயர்களில் சிவனது வெற்றியை குறிக்கும் வகையிலும் தாந்திரிக பௌத்தர்களின் வழிபாட்டுச் சடங்குகளை எதிர்க்கும் வகையிலும் கொண்டாடப்பட்டது. காமன் பண்டிகை இவ்வூரிலும் கொண்டாடப்பட்டது.

எமனும் மதனும்

மன்மதனின் உயிரைப் பறிக்க எமதர்மன் வந்து இறங்கிய இடம் தான் திருச்சிற்றம்பலம் என்ற தகவலும் இக்கதையில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே இங்கு எமதர்மனுக்கும் ஒரு தனிக்கோயில் அமைந்துள்ளதாகத் தல வரலாறு கூறுகின்றது. இங்கு வாயு மூலையில் சிவனும் அக்கினி மூலையில் எமனும் எதிரெதிராகக் காட்சி அளிக்கின்றனர்.  

எமதீர்த்தக் குளம்

எமதர்மன் கோயில் அருகே உள்ள எமதீர்த்தக் குளத்தில் ஆண்கள் மட்டுமே நீராடுகின்றனர்.

திருமண வரமருளும் திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவில் | Thiruchitrambalam Puradhana Vaneswarar Temple

படி கட்டுதல்

திருச்சிற்றம்பலம் கோவிலில் யாரேனும் நம்மிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி இருந்தால் அதைக் குறிப்பிட்டு ஒரு சீட்டில் எழுதி பூஜை செய்து எமதர்மன் கோவில் சூளத்தில் கட்டி விட்டு போகும் பழக்கம் உள்ளது இவ்வாறு அவர்கள் 'படி கட்டிய' சில நாட்களில் கொடுத்த பணம் திரும்ப வரும் என்ற நம்பிக்கையும் இப்பகுதியில் நிலவுகின்றது. தம்பதியருக்குள் ராசியாதிபதி தோஷம் இருந்தால் அவர்கள் இங்கு வந்து பரிகார பூஜை செய்து நலம் அடைகின்றனர். 

 பூ விழுங்கி விநாயகர்

பொதுவாக தஞ்சை திருச்சி மாவட்டங்களில் காணப்படும் கோவில்களில் விநாயகர் தனிச்சிறப்புடையவராக காணப்படுவார். அவ்வகையில் திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் இரண்டு விநாயகர் சன்னதிகள் உண்டு. அவற்றில் ஒன்று பூ விழுங்கி விநாயகர் ஆகும். பக்தர்கள் தங்களுடைய குறைகளை விநாயகரிடம் சொல்லிவிட்டு அவரது காதில் ஒரு பூவை சொருகி வைக்க வேண்டும்.

அந்தப் பூ விநாயகர் சிலைக்கு உள்ளே விழுந்து விட்டால் அவர் அவர்களின் குறைகளை ஏற்றுக் கொண்டார். அதை நிவர்த்தி செய்வார் என்று என்பது பொருளாகும். சிலைக்கு வெளியே பூ விழுந்து விட்டால் பக்தர்கள் நினைத்துச் சென்ற காரியம் நடைபெறாது என்று புரிந்து கொள்வார்கள். ஆக அவர் பூவை விழுங்குவதால் பூ விழுங்கி விநாயகர் என்று அழைக்கப்படுகின்றார். 

பர்வதமலை சிவன் கோவிலும் பௌர்ணமி மலையேற்றமும்

பர்வதமலை சிவன் கோவிலும் பௌர்ணமி மலையேற்றமும்

 

திருமணத் தடை நீக்கும் தலம்

திருமண தோஷம் உள்ளவர்கள் திருமணத்தடை உள்ளவர்கள் தாரதோஷம் உள்ளவர்கள் திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் வந்து அம்பாளைத் தொடர்ந்து வணங்கி வர தடைகள் விலகி விரைவில் திருமணம் நடைபெறும்.

சிறப்பு வழிபாடுகள்

திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு, சிவராத்திரி, வைகாசி விசாகம், தமிழ் வருடப்பிறப்பு, மாசி மகம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன  

பெரியநாயகி கோயிலில்

திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலை இப்பகுதி வாழ் மக்கள் பெரியநாயகி கோவில் என்றே குறிப்பிடுகின்றனர். பெரியநாயகி அம்மனை தங்கள் குலதெய்வமாக கொண்டு வணங்கி வருகின்றனர்

இரட்டைவிநாயகர் கோயில்

இரட்டை விநாயகர் என்பது மிகப்பெரிய பௌத்த தத்துவத்தை உள்ளடக்கியதாகும். விநாயகர் அல்லது யானை என்பது கௌதம புத்தரின் வடிவமாக சின்னமாகக் கருதப்படுகின்றது. கௌதம புத்தரின் தாயார் கருவுற்றிருந்தபோது அவரது வயிற்றுக்குள் ஒரு வெள்ளை யானை புகுவதைக் கண்டார்.

அதனால் அசோகச் சக்கரவர்த்தி கௌதம புத்தருக்கு சிலை வடிக்க வேண்டும் என்று நினைத்தபோது அவருடைய மானுட உருவம் மனதில் இல்லாத காரணத்தினால் கருப்பையில் இருந்து யானை வெளி வருவதைப் போன்ற சிலையை அமைத்தார். அதன் பிறகு பௌத்தர்கள் கௌதம் புத்தரை யானை முகம் கொண்ட மனித உருவம் சிலை செய்து வழிபட்டனர்.

சிறந்த தலைவர் என்ற பொருளில் நாயகர், விநாயகர் என்ற பெயரில் கௌதம புத்தர் சிலைகள் அழைக்கப்பட்டன. இப் பெயரில் உள்ள புத்தரின் செப்புச் சிலைகள் சென்னை மியூசியத்தில் இடம்பெற்றுள்ளன. யானை முகம் கொண்ட தெய்வமான கௌதம புத்தரை வணங்கினால் அவரது பேரருள் கிடைக்கும். அதுவே யானை முகம் கொண்ட இரண்டு தெய்வங்களை வணங்கினால் புத்தரின் பலன் இரண்டு மடங்காக கிடைக்கும் என்று நம்பினர்.

பௌத்த சமயம் உச்சத்தில் இருந்த காலத்தில் இரட்டை விநாயகர் சிலை செய்து வழிபடும் முறை நடைமுறையில் இருந்தது. இன்றைக்கும் சீனாவில் இரட்டை யானை என்பது அதிர்ஷ்டத்தின் சின்னமாக (fengsui) வழங்கப்படுகிறது. பல கடைகளிலும் வீட்டு வாசல்களிலும் அலுவல் அறைகளிலும் இரட்டை யானை சிலைகள் வைத்திருப்பது அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் என்ற நம்புகின்றனர்.

கௌதம புத்தரின் பேரருளைப் பெற்றுத் தரும் என்று நம்புகின்றனர். தமிழகத்தில் ரெட்டை விநாயகர் வடிவில் வழிபடப்பட்ட இரட்டை புத்தர் பௌத்த மதம் காலாவதியான பிறகும் கூட மக்களின் மனதில் மனதை விட்டு அகன்று விடவில்லை.

எனவே இரட்டை விநாயகர் வழிபாடு தொடர்ந்து வருகின்றது. இரட்டை விநாயகர் இன்றும் மிகவும் முக்கியமான தெய்வமாகவும் சிறப்பான தெய்வமாகவும் கருதப்படுவதற்கான காரணம் அவை இரட்டைபலன் கொடுக்கும் என்ற மக்களின் நம்பிக்கையே ஆகும்

நாராயண துதி 108

நாராயண துதி 108

முன் வரலாறு

திருச்சிற்றம்பலம் புராதவனேஸ்வரர் கோவில் சைவப் பேரெழுச்சிக்கு முன்பு பௌத்த சமயத்தவரின் வழிபாட்டுத் தலமாக இருந்திருக்கும். புதிய சிவன் கோவில்கள் தோன்றிய இடங்களில் பெரிய நாயகி, அகிலாண்டேஸ்வரி, உலகநாயகி என்ற பொதுப் பெயர்களில் அம்மன் அழைக்கப்படுகின்றார். அவளது பழைய பெயர் தாராதேவி ஆகும்.

தாராதேவிக்குக் கோவில் எழுப்பப்பட்ட பௌத்தக் கோயில்கள் பின்னர் சிவன் கோவில்களான போது தாராதேவியை பெரியநாயகி அகிலாண்டேஸ்வரி போன்ற பொதுப் பெயர்களில் அழைத்தனர். தாரா தேவி வழிபாடு சிறப்பாக இருந்த தலங்களில் அம்பாளின் பெயரால் புதிய கோவில் அழைக்கப்படும் மரபு மக்களிடம் காணப்படுகின்றது.

இரட்டைவிநாயகர் சந்நிதியும் இங்கு முன்பு பௌத்த கோயில் இருந்ததை உறுதி செய்கின்றது. போதிதர்மர், அவலோகதீஸ்வரர் புத்த தர்மர், என்று புத்த நிலை அடைந்த பௌத்தத் துறவிகளுக்கு சிலைகளும் சன்னிதிகளும் பௌத்தக் கோயில்களில் எழுப்பப்பட்டன. இப்பெயர்களும் பின்னர் தர்ம ராசா என்றும் எமனுக்கு பிறந்தவன் தர்மன் என்ற பொருளில் எமதர்ம ராசா என்றும் மாற்றம் பெற்றன. இம்மாற்றங்களும் பல ஊர்களில் காணப்படுகின்றன.

புதிய எமதர்ம ராசா கோவிலில் எருமை மாட்டில் வரும் எமனின் உருவப்படமோ சிலையோ தற்போது காணப்படுகின்றது. பௌத்த துறவி கோலத்தில் போதிதர்மர் அல்லது புத்த தர்மர் காணப்படவில்லை. சில ஊர்களில் எமதர்மனின் கோவில் கால சாமி கோவில் அல்லது காலதேவன் கோவில் என்றும் அழைக்கப்படுகின்றது.

ஏனென்றால் எமதர்மன் புதிய கதைகளின் படி மனிதர்களின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கின்றவன் ஆவான். எனவே காலதேவன் என்ற பெயரும் அவனுக்கு வழங்குகின்றது. எனவே இக்கோவிலில் உள்ள தெய்வங்களில் எமனும் பெரிய நாயகியும் மிகப் பழைய தெய்வங்கள் என்பதை அறியலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.






+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US