பைரவர் பூஜை அதிக பலன் தர நாம் செய்ய வேண்டியவை

By பிரபா எஸ். ராஜேஷ் Oct 17, 2024 05:30 AM GMT

பைரவர் என்னும் கடவுளை நாம் சிவன் கோயில்களில் வடகிழக்கு மூலையில் தனி சந்நிதி கொண்டிருப்பதைப் பார்க்கலாம். பைரவர் காலனை எதிர்த்தவராக இந்து சமயத்தில் கருதப்படுகிறார். எனவே இவரை கால பைரவர் என்பர். சிவனின் அம்சமாக விளங்கும் இவர் சப்தமாதருக்கு உரிய இணை தெய்வமாகக் கருதப்டுகிறார். வடநாட்டில் அஷ்ட பைரவர் ஆகவும் வணங்கப்படுகிறார்.

தேய்பிறை அஷ்டமி பூஜை

ஜோதிடத்தில் சனி பகவானால் தோஷம் உள்ளவர்கள் சனியின் தொல்லைகள் நீங்குவதற்கு விநாயகர், ஆஞ்சநேயர் அல்லது பைரவரை வணங்க வேண்டும். பைரவர் சனியினால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து ஜாதகரைக் காப்பாற்றுவார். தேய்பிறை அஷ்டமி அன்றும் ஞாயிற்று கிழமைகளிலும் ராகு காலத்தில் பைரவரை வணங்கலாம். 

பைரவர் பூஜை அதிக பலன் தர நாம் செய்ய வேண்டியவை | Ashta Bhairava Names In Tamil

பைத்தியம் போக்கும் உன்மத்த பைரவர்

பைரவருக்கு எலுமிச்சம்பழம் படைத்து வழிபடுவது நல்லது. உன்மத்த (பைத்தியம்) பைரவர் மன அழுத்தம், மனக் கவலை, மனநோய், புத்தி பேதலித்தல் போன்றவற்றை நீக்கி அருள்வார். பைரவருக்கு எலுமிச்சம் மாலை அல்லது எலுமிச்சங்கனி படைத்து விட்டு கோவில் வாசலில் இருக்கும் புத்தி பேதலித்தவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். ஒரு வேளை உணவு வழங்கலாம்.  

பைரவர் பூஜை அதிக பலன் தர

பைரவர் பூஜை கோயிலோடு முடிந்துவிடுவதில்லை. பூஜை என்பது நம் தீவினை தொலைவதற்காக நாம் செய்யும் தான் தர்மங்களில் பைரவர் துணை வேண்டும் என்று அவரை வேண்டுவது தான் பைரவர் பூஜை. நம் தீவினை பயன்கள் அகல கலியுகத்தில் ஒரே வழி தானதர்மங்கள் செய்வதாகும். 

மனக்கவலை தீரும்

மனநிலை சரியில்லாத பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் அவர்களின் இடத்திற்குச் சென்று தேய்பிறை அஷ்டமி அன்று அன்னதானம் செய்யலாம். குழந்தைகளுக்கு எழுதுபொருட்கள் வாங்கி தரலாம். மனநல மருத்துமனைகளுக்குச் சென்று அங்குள்ள நோயாளிகளுக்கு ரொட்டி, பழம், பிஸ்கட் போன்ற உணவுகளைத் தானமாக அளிக்கலாம். இதனால் பைரவருடைய அருள் கிடைத்து மன நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். பாவம் விலகும். 

பைரவர் பூஜை அதிக பலன் தர நாம் செய்ய வேண்டியவை | Ashta Bhairava Names In Tamil

சனி தோஷம் விலகும்

சனி தோஷம் காரணமாக பைரவரை வணங்குவோர் சனிக்கிழமைகளில் சனி ப்ரீத்தி செய்யும் வகையில் இடுப்புக்கு கீழே கால் முடமாக இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்தல், முதியவர்களுக்கு முதியோர் விடுதிக்கு சென்று அன்னதானம் செய்தல், திருமணம் ஆகாத முதிர் கன்னிகளின் திருமணச் செலவில் ஒரு பங்கை ஏற்றுக் கொள்ளுதல், பெட்ரோல் பங்க்கில், நிலக்கரிச் சுரங்கத்தில், அடுப்புக்கரி மூட்டம் போடும் வேலையில் தார் ரோடு போடும் வேலையில் இருப்பவர்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்தல், செருப்பு, ஷு, கால் சராய் போன்றவை வாங்கி கொடுக்கலாம். இத்தகைய தான தர்மங்களை பைரவர் பூஜையுடன் சேர்த்து செய்தால் சனி தோஷம் நீங்கும். 

ஆயுள் அதிகரிக்கும்

ஆயுள் விருத்திக்காக பைரவர் கோவிலுக்கு வாரம்தோறும் செல்லலாம். ஜாதகத்தில் யாருக்காவது ஆயுள் தோஷம் இருப்பதை அறிந்து கொண்டால் அவர்கள் கால பைரவர் கோவிலுக்கு வாரந்தோறும் சென்று வணங்கி வந்தால் ஆயுள் கண்டம் தொலைந்து போகும். காலனை எதிர்த்த காலபைரவன், கால சம்ஹார மூர்த்தியான சிவபெருமானின் அம்சமாக விளங்குவதால், உயிரை எடுக்க வரும் காலனை எட்டி உதைத்து ஆயுளை காப்பாற்றி கொடுப்பான். 

பைரவர் பூஜை அதிக பலன் தர நாம் செய்ய வேண்டியவை | Ashta Bhairava Names In Tamil

மகா பைரவர்

பைரவர் இந்து சமயத்திலும் புத்த சமயத்திலும் பெரும் தெய்வமாக வணங்கப்பட்டார். காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சைவ சமயப் பிரிவில் மகா பைரவர் என்று பரப்பிரம்மமாக இவரைக் கருதி வணங்குகின்றனர். இங்குள்ள வஜ்ராயன பிரிவில் இவரை சகல சக்திகளும் உடைய தெய்வமாகவும் போற்றுகின்றனர்.

பைரவரை ஹேருகா என்றும் வஜ்ரபைரவர் என்றும் மகாகாலன் என்றும் எமாந்தகா என்றும் அழைக்கின்றனர். பைரவனை வணங்கினால் மனக் கவலை தீரும், சனி தோஷம் விலகும் ஆயுள் தோஷம் நீங்கும். எமனை வெற்றி கொண்டவன் பைரவர் என்பதால் இவரை கால பைரவர் என்றனர். 

தமிழ்நாட்டில் பைரவர் இந்தியாவில் வாரணாசியில் அஷ்ட பைரவரும் உஜ்ஜினியல் காலபைரவரும் தனி கோவில் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் சொர்ண பைரவர் தனி சந்நிதி கொண்டு உள்ளார். திருச்செங்கோட்டில் காலபைரவருக்குத் தனிக் கோவில் உண்டு.

ஜொலிக்கும் நட்சத்திரப் பட்டியல்

ஜொலிக்கும் நட்சத்திரப் பட்டியல்


முதுகுளத்தூரில் மேலப்பனையூர் என்ற கிராமத்தில் கால பைரவருக்கு தனிக் கோவில் உண்டு. திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலிலும் மதுரை கூடல்ழகப் பெருமாள் கோவிலிலும் காலபைரவருக்குத் தனி சந்நிதி கொண்டு.

தஞ்சாவூரில் வடக்கு தென்னங்குடியில் கால பைரவருக்கு தனி கோவில் உள்ளது. தர்மபுரியில் அதியமான் கோட்டையிலும் திருவள்ளூரில் தொம்பரம்பேடு கிராமத்திலும் திருச்சியில் ஓடத்துறை சாலையிலும் திருக்கோஷ்டியூரில் வைரவன்பட்டியிலும் கோயம்புத்தூரில் கருநெல்லி பாளையத்திலும் கிருஷ்ணகிரியில் கல்லுக்குறிக்கையிலும் குடியாத்தத்தில் மோகனூர் கிராமத்திலும் குற்றாலத்திலும் காரைக்குடியிலும் (வைரவன்பட்டி) திருமயத்திலும் (கோட்டை பைரவர்) கும்பகோணத்திலும் (வைரவேஸ்வரர்) போடிநாயக்கனூரிலும் சேலம் அக்கரைப்பட்டியிலும் நாகப்பட்டினம் தகடூரிலும் நன்னிலத்திலும் மதுரையில் கிழக்காவணி மூல வீதியிலும் வண்டியூர் மாரியம்மன் கோவில் அருகிலும் பைரவர் கோவில்கள் உள்ளன.

பைரவரை இந்துக்களும் பௌத்தர்களும் இந்தியாவில் மட்டுமல்லாது நேபாளம், இந்தோனேசியா, ஸ்ரீலங்கா, திபெத் ஜப்பான் போன்ற நாடுகளிலும் வணங்குகின்றனர்

பைரவர் பூஜை அதிக பலன் தர நாம் செய்ய வேண்டியவை | Ashta Bhairava Names In Tamil

காவல் தெய்வமானார்

இந்து சமயத்தில் பைரவருக்கு ஒரு புராணக் கதை உண்டு. அடிமுடி சிவனின் அடிமுடி தேடிய படலத்தில் சிவனின் தலை முடியை கண்டுவிட்டதாக பிரம்ம தேவன் சிவனின் தலையில் இருந்து விழுந்த தாழம்பூவிடம் பொய் சாட்சி சொல்லச் சொன்னார்.

இவ்வாறு தாழம்பூவை பொய் சொல்ல தூண்டிய பாவத்திற்காக பிரம்மனுக்கு இருந்த ஐந்து தலையில் (அவன் அகந்தையை நீக்கும் வண்ணமாக) ஒரு தலையை வெட்டி எடுத்தவர் பைரவர். இதனால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க வேண்டி மூன்று உலகங்களும் சுற்றி அலைந்தார். பின்பு காசி நகரம் வந்ததும் அவரது பாவம் தொலைந்தது. அவர் கையைக் கவ்வி இருந்த பிரம்மனின் தலை இவர் காசி மண்ணை மிதித்ததும் கையை விட்டுக் கீழே விழுந்தது.   

அஷ்ட பைரவர்

காசியில் அஷ்ட பைரவர் கோவில் என்று 8 பைரவர்களுக்கும் தனித்தனி சன்னதி உண்டு. கையில் கபாலம் வைத்திருந்ததால் இவரை கபாலிகர் என்றும் அழைத்தனர். சிவபெருமான் இவரை சக்தி பீடங்களின் காவலனாக நியமித்தார். எனவே சக்தி இருக்கும் இடங்களில் எல்லாம் காவல் தெய்வமாக பைரவர் இருப்பார்.

பைரவர் பௌத்தர்களால் வனங்கப்பட்டதால் கிராமங்களிலும் காவல் தெய்வமாகவும் துணை தெய்வமாகவும் வைரவர் என்ற பெயரில் வணங்கப்படுகிறார். வடநாட்டில் பைரவர் என்று இவரை அழைக்கின்றனர். அஷ்ட பைரவர்களும் அஷ்ட மாத்திரிக எனப்படும் எட்டு கன்னிமாரும் இணைந்து 64 பைரவர்களையும் 64 யோகிகளையும் பிறப்பித்தனர் என்று புராண வரலாறு கூறுகின்றது.

பைரவர் பூஜை அதிக பலன் தர நாம் செய்ய வேண்டியவை | Ashta Bhairava Names In Tamil

இனி பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்று பூஜை செய்யும் போது பின்வரும் துதியை சொல்லி வாருங்கள்.

ஓம் அஷ்ட பைரவ போற்றி

ஓம் ஆதி பைரவா போற்றி

ஓம் அறங்காவல போற்றி

ஓம் ஆனந்த பைரவா போற்றி

ஓம் உக்கிர பைரவா போற்றி 5

ஓம் உன்மத்த பைரவா போற்றி

ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி

ஓம் கபால பைரவா போற்றி

ஓம் கங்காள பைரவா போற்றி

ஓம் கால பைரவா போற்றி 10

உலகெங்குமுள்ள முருகனைத் துதித்துப் போற்றி போற்றி

உலகெங்குமுள்ள முருகனைத் துதித்துப் போற்றி போற்றி


ஓம் சொர்ண பைரவா போற்றி

ஓம் மகா பைரவா போற்றி

ஓம் காசி பைரவா போற்றி

ஓம் அகந்தை அறுத்தவனே போற்றி

ஓம் நாய் வாகனா போற்றி 15

ஓம் பகை அழிப்பவனே போற்றி

ஓம் பாவம் தீர்ப்பவனே போற்றி

ஓம் முக்கண்ணா போற்றி

ஓம் முக்தி தருவாய் போற்றி

ஓம் யோக பைரவா போற்றி 20

சைவம் போற்றும் 63 நாயன்மார்கள்

சைவம் போற்றும் 63 நாயன்மார்கள்


ஓம் ஈசானியக் காவலா போற்றி

ஓம் நின்றருள் நாயகா போற்றி

ஓம் பாபநாசனே போற்றி

ஓம் பய நாசனே போற்றி

ஓம் காலாஷ்டமி நாதா போற்றி 25

ஓம் காவல் தெய்வமே போற்றி

ஓம் சிவ ரூபனே போற்றி

ஓம் அம்ருதாக்ஷ பைரவா போற்றி

ஓம் அசிதங்க பைரவா போற்றி

ஓம் பைத்தியநாதா போற்றி 30

நாராயண துதி 108

நாராயண துதி 108


ஓம் பத்ரசேன பைரவா போற்றி

ஓம் பூதநாத பைரவா போற்றி

ஓம் சந்திரசேகர பைரவா போற்றி ஓம் சேத்திரபால பைரவா போற்றி ஓம் லம்பகர்ண பைரவா போற்றி35

ஓம் மகா ருத்ர பைரவா போற்றி

ஓம் மாதங்க பைரவா போற்றி

ஓம் ருத்ர மகாதேவா போற்றி

ஓம் சம்பரானந்தா போற்றி

ஓம் சர்வானந்தாபோற்றி 40

ஓம் வெள்ளைப் பைரவா போற்றி

ஓம் சொர்ணாகர்ஷண பைரவா ஓம் திரயம்பக போற்றி

ஓம் தும்பேஸ்வரா போற்றி

ஓம் உமானந்தா போற்றி 45

இராமாயணத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான கதாபாத்திரங்கள்

இராமாயணத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான கதாபாத்திரங்கள்

 

ஓம் பயானந்தா போற்றி

ஓம் வக்கிர நாதா போற்றி

ஓம் விக்ராந்த் பைரவா போற்றி

ஓம் விமோசன பைரவா போற்றி

ஓம் விஸ்வேஸ்வர பைரவா போற்றி 50

ஓம் அசிதாங்க பைரவா போற்றி

ஓம் சண்ட பைரவா போற்றி

ஓம் குரோத பைரவா போற்றி

ஓம் சங்கார பைரவா போற்றி 54

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.





+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US