ஜோதிடத்தில் சில ஜாதககாரர்களுக்கு திருமணமே நடக்காது என்ற அமைப்பு இருக்கும்.
அதற்கு காரணம் சூரியன், செவ்வாய், புதன், சனி ஆகிய கிரகங்கள் 10 ம் வீட்டில் சேர்க்கை பெற்றிருந்தால் அவர் சன்னியாசம் செல்வார் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
அடுத்து சிலருக்கு கிரக அமைப்புகள் படி திருமண தோஷம் இருக்கும். உரிய வயதிற்கு பிறகும் திருமணம் நடைபெறாமல் இருப்பதும் ஒரு வகையில் தோஷம்தான்.
இதுபோன்ற நிலையில் இருப்பவர்கள், ஏற்கனவே மணம் முடித்துப் பிரிந்தவர்கள் ராமகிரி காலபைவரிடம் சரண் அடைந்தால் உரிய பலன் கிடைக்கும்.
இந்த தலத்துக்கு வந்து காலபைரவருக்கு அபிஷேகம் செய்து உரிய வழிபாடு செய்தவர்களுக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.
காலபைரவரின் கருணை பார்வையால் கையோடு திருமணம் நடைபெற்றுள்ளது. எனவே ராமகிரி திருத்தலம் திருமண வரம் தரும் தலமாகவும் திகழ்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |