2026: தைப்பூசம் அன்று வேண்டிய வரம் கிடைக்க பாடவேண்டிய திருப்புகழ்
முருகப்பெருமான் வழிபாடுகளில் தைப்பூச வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் முருக பக்தர்கள் அனைவரும் 48 நாட்கள் என தொடங்கி அவரவர் வசதிகளுக்கு ஏற்ப விரதம் இருந்து பாதையாத்திரை சென்றும் பால் காவடி எடுத்தும் முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள்.
அப்படியாக தைப்பூசம் என்பது தவிர்க்க முடியாத மிகவும் விசேஷமான இந்து மத விழாவாகும். அந்த வகையில் தைப்பூசத் திருநாளில் நாம் விரதம் இருந்து ஆலயம் சென்று வழிபாடு செய்தால் நிச்சயம் முருகப்பெருமானுடைய அருளால் நீங்கள் கேட்ட வரம் கிடைக்கும்.
அந்த வகையில் தைப்பூச தினத்தன்று முருகப் பெருமானுடைய முழு அருளை பெற்று வாழ்கையில் உயர்ந்த நிலைக்கு செல்ல அறுபடை வீடுகள் உடைய திருப்புகழ் பாராயணம் செய்தால் நிச்சயம் நல்ல மாற்றம் கிடைக்கும். அதைப் பற்றி பார்ப்போம்.
திருப்புகழ் -
திருப்பரங்குன்றம் :
சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே
கந்தனென்று என்று உற்று உனைநாளும்
கண்டுகொண்டு அன்புற்றிடுவேனோ
தந்தியின் கொம்பை புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே

திருப்புகழ் - திருச்செந்தூர் :
இயலிசையில் உசித வஞ்சிக்கு அயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித்து உழலாதே
உயர்கருணை புரியும் இன்பக்கடல் மூழ்கி
உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே
மயில் தகர்கல் இடையர் அந்தத் தினைகாவல்
வனசகுற மகளை வந்தித்து அணைவோனே
கயிலைமலை அனைய செந்தில் பதிவாழ்வே
கரிமுகவன் இளைய கந்தப் பெருமாளே
திருப்புகழ் - பழனி :
அபகார நிந்தைபட்டு உழலாதே
அறியாத வஞ்சரை குறியாதே
உபதேச மந்திரப் பொருளாலே
உனை நான் நினைந்து அருள் பெறுவேனோ?
இபமா முகன் தனக் கிளையோனே
இமவான் மடந்தை உத்தமிபாலா
ஜெபமாலை தந்த சற் குருநாதா
திருவாவினன் குடி பெருமாளே.
திருப்புகழ் - சுவாமிமலை :
சரண கமலாலயத்தில் அரை நிமிஷ நேர மட்டில்
தவமுறை தியானம் வைக்க அறியாத
ஜட கசட மூட மட்டி பவ வினையிலே சனித்த
தமியன் மடியால் மயக்கம் உறுவேனோ?
கருணை புரியாதிருப்ப தென குறை இவேளை செப்பு
கயிலைமலை நாதர்பெற்ற குமரோனே
கடக புயமீதி ரத்ன மணியணி பொன்மாலை செச்சை
கமழு மணமார் கடப்பம் அணிவோனே
தருணம் இதையா மிகுத்த கனமதுறு நீள்சவுக்ய
சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு தகைமை சிவ ஞான முத்தி பரகதியு நீகொடுத்(து)
(உ)தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா
அருணதள பாத பத்மம் அதுநிதமுமே துதிக்க
அரிய தமிழ் தானளித்த மயில்வீரா அதிசயம் அனேகம் உற்ற பழனிமலை மீதுதித்த
அழக, திருவேரகத்தின் முருகோனே
திருப்புகழ் - திருத்தணி :
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவர் உயிர்க்கும் சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென்று அறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புகழ் உரைக்குஞ் செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந்தன பேரி
தடுட்டுடு டுடுட்டுண் டென துடி முழக்கும்
தளத்துட னடக்கும் கொடுசூரர்
சினத்தையும் உடற்சங் கரித்தம லைமுற்றும்
சிரித்தெரி கொளுத்தும் கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்து எண்
திருத்தணி யிருக்கும் பெருமாளே.
திருப்புகழ் - பழமுதிர்சோலை :
வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயமது ஒழிந்து தெளியேனே
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபதம் அணிந்து பணியேனே
ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
ஆறுமுக மென்று தெரியேனே
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்டது
ஆடுமயி லென்பது அறியேனே
நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானிலம் அலைந்து திரிவேனே
நாகம் அணிகின்ற நாதநிலை கண்டு
நாடியதில் நின்று தொழுகேனே
சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
சோகமது தந்து எனையாள்வாய்
சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்ற பெருமாளே.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |