பெருமாள் கோயிலில் இருக்கும் காசி விசுவநாதர்- எங்கு தெரியுமா?
திருவித்துவக்கோடு உய்யவந்த பெருமாள் கோயில் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் பட்டாம்பி என்ற இடத்தில் பாரதப்புழா ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் கேரளாவில் அமைந்துள்ள 13 திவ்ய தேசங்கள் இதுவும் ஒன்றாகும். குறிப்பாக இது நவகிரக தலங்களில் சந்திரனுக்குரிய தலமாகவும் கருதப்படுகிறது.
பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனால் இத்தலம் நிர்மாணிக்கப்பட்டது இதன் சிறப்பாகும். ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் இத்தல பெருமாளை பாடியுள்ளார். இப்போது இந்த தலத்தின் வரலாறையும் சிறப்புகளையும் பெருமைகளையும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
தல வரலாறு:
இத்தலத்தின் வரலாறு மகாபாரதத்துடன் தொடர்புடையதாகும். மகாபாரத போரில் உறவினர்களை கொன்ற பாவம் நீங்குவதற்காக பஞ்சபாண்டவர்கள் பல புண்ணிய தலங்களுக்கு சென்று வழிபட்டனர். பஞ்சபாண்டவர்கள் ஒருவரான அர்ஜுனன் இங்குள்ள பாரதப்புழா நதிகளில் சிவபெருமானை நோக்கி தவம் செய்து வழிபட்டார்.
அவருடைய சகோதரர்களான தருமன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோரை போலவே, இந்த உலகத்தை காக்கும் இறைவனை வழிபட எண்ணி, அர்ஜுனன் அவருடைய சுய முயற்சியால் நான்கு சகோதரர்களுக்கும் தனித்தனியே நான்கு கோயில்களை அங்கேயே கட்டியுள்ளார். முதல் கோயிலை தருமருக்காக நிறுவி அங்குள்ள மூலவருக்கு உய்யவந்த பெருமாள் என பெயரிட்டுள்ளார்.
இவரே இந்த தலத்தின் மூலவர் ஆவார். பின்னர் மற்ற சகோதரர்களுக்காக மேலும் மூன்று கோயில்களை அர்ஜூனன் நிறுவியுள்ளார். ஆனால் காலப்போக்கில் அவை சிதிலமடைந்து, உய்ய வந்த பெருமாள் சன்னதி மட்டுமே தற்போது வரை நிலைத்துள்ளது.
தல அமைப்பு:
கேரள கட்டுமான கலையின்படி இக்கோயில் மிக நேர்த்தியாகும் எளிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சிற்பங்கள் கிரானைட் கற்களால் ஆனவை. மூலவர் உய்யவந்த பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். மூலவரின் கைகள் சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றின் காட்சி அளிக்கிறார்.
இங்குள்ள உற்சவர் வித்துவக் கோட்டு தேவன் எனவும் அழைக்கப்படுகிறார். அர்ஜுனனால் கட்டப்பட்ட நான்கு சன்னதிகளின் இங்கே காண முடியும். அவை அர்ஜுனனின் நான்கு சகோதரர்களான தருமன், பீமன் நகுலன் சகோதரி குறிப்பதாக கருதப்படுகிறது.
கிழக்கு நோக்கிய சன்னதி தருமனுக்காகவும், தெற்கு நோக்கிய சன்னதி பீமனுக்காகவும், மேற்கு நோக்கிய சன்னதி அர்ஜுனனுக்காகவே கட்டியதாகும் சிலர் இது நகுலனுக்காக கட்டியதாகவும் கூறுவர்.
அதோடு வடக்கு நோக்கிய சன்னதி சகாதேவனுக்காக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இவற்றுள் கிழக்கு நோக்கிய சன்னதி உய்யவந்த பெருமாளுக்காகவும் பிற சன்னதிகள் விஷ்ணு பகவானுக்காகவும் கட்டப்பட்டுள்ளது. இத்தலத்தினை சுற்றிலும் சிவன், கணபதி, ஐயப்பன், பகவதி ஆகியோருக்கு தனி தனி உபசன்னதிகள் உள்ளன.
பெருமாள் கோயிலின் அருகில் சிவனுக்கும் சன்னதி இருப்பது விசேஷமாக கருதப்படுகிறது. இங்குள்ள திருக்குளம் பாபநாச தீர்த்தம் என்றும் பாரதப்புழா நதி இத்தலத்தின் புண்ணிய நதியாகவும் அமைந்துள்ளது.
திருவிழாக்கள்:
இத்தலத்தில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும் முக்கியமாக சில விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன. அவற்றை கீழ் வருமாறு காணலாம்.
ஏகாதசி:
வருடத்தின் அனைத்து ஏகாதசிகளும் குறிப்பாக வைகுண்ட ஏகாதசி இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி:
பெருமாள் கோயிலின் பிரதான விழாவாக கிருஷ்ண ஜெயந்தி அதாவது அஷ்டமி ரோகினி கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி சனிக்கிழமைகள்:
திருமாலுக்கு உகந்த நாளாக கருதப்படுவதால், புரட்டாசி சனிக்கிழமைகளில் திரளான பக்தர்கள் உய்யவந்த பெருமாளை வந்து வழிபட்டு செல்கின்றனர். விஷூ பண்டிகை: கேரளா நாட்காட்டியின் படி வரும் புத்தாண்டு தினம் இங்கு மிகவும் உற்சாகத்துடன் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
தல சிறப்புகள்:
நான்கு சகோதரர்கள் சன்னதி: இத்தலம் பஞ்ச பாண்டவர்களின் ஒற்றுமையும் பாசத்தையும் குறிக்கும் வகையில் அர்ஜூனனால் கட்டப்பட்டது. இங்குள்ள நான்கு சன்னதிகளிலும் திருமலை நான்கு விதமாக மக்களுக்கு காட்சி அளிக்கிறார்.
திவ்ய தேசம்:
108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்றாக போற்றப்படுவது இதன் தனி சிறப்பாகும்.
குலசேகர ஆழ்வார் மங்களாசாசனம்:
இத்தல பெருமாள் மீது குலசேகர ஆழ்வார் பாடிய பெருமாள் திருமொழி மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் பெருமாளை தனது தாயாகும் தந்தையாகவும் அண்ணன்மார்களாகவும் பாவித்து பாடியுள்ள பாசுரங்கள் காணப்படுகின்றன.
நவக்கிரக தலம்:
ஜோதிடத்தின் படி இத்தலம் சந்திரனுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. சந்திரன் மனோகாரகன் என்பதால் மனநலம் குன்றியவர்கள் குழப்பங்கள் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபாட்டால் நிவாரணம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பரசுராம சேத்திரம்:
பரசுராமரால் நிறுவப்பட்டதாக கருதப்படும் 108 சேத்திரங்களில் இதுவும் ஒன்றாகும்.
வழிபாட்டு நேரம்:
காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்களின் வழிபாட்டிற்காக கோயில் திறந்து வைக்கப்படுகிறது. பாரதப்புழா நதிக்கரையில் அமைந்திருக்கும் திருவித்துவக்கோடு உய்யவந்த பெருமாள் கோயில், அர்ஜுனனின் சகோதர பாசத்தின் சின்னமாகவும், குலசேகராழ்வாரின் பக்தி பிணைப்பின் உறைவிடமாகும் விளங்குகிறது.
மன அமைதிக்கும், சந்திரன் தோஷம் நீங்கவும், குடும்ப உறவுகள் பலப்படவும்ம் இந்த திவ்ய தேசத்திற்கு வந்த வழிபடுவது சிறப்பான பலன்கள் அளிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இந்த கோயிலின் அமைதி தவழும் சூழலும் பாரம்பரிய கட்டமைப்பும் பக்தர்களுக்கு புதிய ஆன்மிக அனுபவத்தை அளிக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







