ஒருவரை பழிவாங்கும் குணம் கொண்ட 3 ராசிகள் யார் தெரியுமா?
மனிதர்களுக்கு பலவகையான உணர்வுகளும் குணங்களும் உண்டு. அதில் யாரேனும் ஒருவருக்கு ஒருவர் தீங்கு செய்து விட்டார்கள் என்றால் கட்டாயம் ஒருவர் பழிவாங்க வேண்டும் என்று துடிப்பார்கள். இந்த எண்ணம் பெரும்பாலும் சிலருக்கு ராசி ரீதியாகவும் அமைகிறது என்று சொல்கிறார்கள்.
அதாவது ஒரு குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே ஒருவரை பழி வாங்க வேண்டும் என்று எண்ணம் இருக்குமாம். அப்படியாக எந்த ராசியினருக்கு ஒருவர் தீங்கு செய்து விட்டார் என்றால் அவர்களுக்கு பதில் அடியாக கொடுத்துவிட வேண்டும் என்ற அதிக பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்கள் என்று பார்ப்போம்.
மிதுனம்:
மிதுன ராசியை பொறுத்தவரை அவர்கள் எதையும் அவ்வளவு எளிதாக மறக்க மாட்டார்கள். ஒருவர் இவர்களுக்கு ஏதேனும் தீங்கு செய்து விட்டார்கள் என்றால் அந்த தீங்கை விட பல மடங்கு அவர்களுக்கு பதில் அடி கொடுத்தால் மட்டுமே நிம்மதியாக தூங்க முடியும். அந்த அளவிற்கு இவர்கள் மனதில் கோபம் நிறைந்திருக்கும். மேலும் இவர்களால் அவ்வளவு எளிதாக ஒருவருடைய உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது. ஆதலால் மிக எளிதாக காயப்படுத்துகிறது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியை பொறுத்த வரை இவர்கள் ஒருவரிடம் பழகும் போதே மிகவும் காரியமாக பழகுவார்கள். இவர்கள் தன்னிடம் யாரும் எந்த வம்பு வழக்குகள் வைத்துக் கொள்ளக் கூடாது என்று நினைப்பவர்கள். அதேபோல் இவர்களும் யாரிடமும் தானாக முன் சென்று வம்புகளை இழுக்க மாட்டார்கள். ஆனால் ஒருவரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்து விட்டால் இவர்களைப் போல் காத்திருந்து அந்த காரியத்தை பழிவாங்க யாராலும் முடியாது.
மகரம்:
மகர ராசியை பொறுத்தவரை எல்லா விஷயங்களிலும் சரியாக செயல்பட வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள். ஆதலால் இவர்கள் தவறுகளை அவ்வளவு எளிதாக மன்னித்து ஏற்றுக் கொள்ளும் மனநிலை இருக்காது. இவர்களிடம் யாரேனும் தொந்தரவு செய்தால் என்றால் அவர்களுக்கு கட்டாயம் இவர்கள் தக்க பாடம் கற்பிப்பது எந்த தயக்கமும் காட்ட மாட்டார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







