இந்த ராசிகளுக்கு தான் அதிக அளவில் எதிரிகள் இருப்பார்களாம்.. ஏன் தெரியுமா?
நாம் ஒரு சிலரை பார்த்திருப்போம் அவர்கள் எந்த தவறும் செய்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களை சுற்றி நிறைய நபர்கள் அவர்களுக்கு எதிராக இருப்பார்கள். காரணம் சமயங்களில் அந்த நபர் உண்மையாக செயல்படுவதாலே பலருக்கும் அதிருப்தியை கொடுத்து விடுகிறது.
அதாவது தீயவர்கள் வாழ்கின்ற கூட்டத்தில் ஒரு நல்லவன் மட்டும் வாழ்கின்றான் என்றால் நிச்சயம் அவன் அந்த தீயவர்களுக்கு அச்சுறுத்தலாக தான் இருப்பான். அப்படியாக ஜோதிட ரீதியாக குறிப்பிட்ட சில ராசிகளுக்கு எதுவும் செய்யாமல் எதிரிகள் அதிகம் இருப்பார்களாம், அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களை ஆளக்கூடிய கிரகம் சுக்கிர பகவான். ரிஷப ராசிக்காரர்கள் எப்பொழுதும் உண்மையின் பக்கம் நிற்கவே விரும்புவார்கள். அது மட்டுமல்லாமல் இவர்களுடைய சிந்தனை எல்லோரையும் போல் அல்லாமல் தனித்துவமாக இருக்கும். இந்த தனித்துவம் தான் பலருக்கும் பிடிப்பதில்லை. மேலும் ரிஷப ராசிக்காரர்களை தவறு செய்ய தூண்டினால் நிச்சயம் அவர்கள் அதற்கு உடன் போக மாட்டார்கள். ஆதலால் இந்த நல்ல குணங்களே பலருக்கும் அச்சுறுத்தலாக அமைந்துவிடுகிறது.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் எப்பொழுதும் சமநிலையாக வாழக்கூடியவர்கள். மேலும் பல நேரங்களில் தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று செயல்பட கூடியவர்கள். இவர்கள் அனாவசியமாக யாரிடமும் தேவை இல்லாத வாக்குவாதமும் சண்டை சச்சரவுகளும் வைத்துக் கொள்வதில்லை. அதாவது இவர்களை என்ன செய்தாலும் யார் பக்கமும் சாயாமல் செயல்படுவதால் பலருக்கும் இவர்களை பல நேரங்களில் பிடிப்பதில்லை.
மீனம்:
மீன ராசிக்காரர்களை ஆளக்கூடிய கிரகம் குருபகவான். மேலும், குரு பகவான் எதையும் நேர்த்தியாகவும் நேர்மையாகவும் செய்யக் கூடியவர். இவர்கள் ஒரு ஆசிரியரை போல் சமுதாயத்திலும் குடும்பத்திலும் வேலை செய்யும் இடங்களிலும் இருப்பார்கள். இவர்களுடைய இந்த பக்குவம் தான் பலருக்கும் பிடிப்பதில்லை. தவறு செய்பவர்களிடம் செய்வது தவறு என்று உணர செய்ய முயலும் பொழுது இவர்கள் பலருக்கும் எதிரியாகி விடுகிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |