நவராத்திரி 9 நாட்களும் இந்த 5 விஷயங்களை மட்டும் செய்யாதீர்கள்
நவராத்திரி என்பது பெண் சக்தியை போற்றி வழிபாடு செய்யக்கூடிய முக்கியமான பண்டிகையாகும். மேலும் நவராத்திரி ஒன்பது நாட்களும் அம்பிகையின் 9 அவதாரங்களை நாம் போற்றி வழிபாடு செய்து அம்பிகையின் அருளை பெறக்கூடிய அற்புதமான காலம் ஆகும். அப்படியாக நவராத்திரி காலங்களில் நாம் முக்கியமான சில விஷயங்களை செய்வதை தவிர்க்கவேண்டும் என்கிறார்கள்.
இவ்வாறாக சில விஷயங்களை நவராத்திரி காலத்தில் நாம் செய்யும் பொழுது அம்பிகையின் கோபத்திற்கு ஆளாக கூடும் என்று சொல்கிறார்கள். அப்படியாக நவராத்திரி காலங்களில் எந்த விஷயங்களை செய்ய வேண்டும்? எந்த விஷயங்களில் தவிர்க்க வேண்டும் என்று பார்ப்போம்.
1. நவராத்திரி காலங்களில் 9 நாட்களும் நாம் முடி மற்றும் நகம் வெட்டுவதைதவிர்க்க வேண்டும்.
2. நவராத்திரி காலங்களில் கொலு வைத்து வழிபாடு செய்பவர்கள் வீடுகளில் கட்டாயம் யாரேனும் ஒருவர் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
3. அதோடு காலை மாலை வேலைகளில் பூஜைகளை தவறாமல் செய்ய வேண்டும். நவராத்திரி காலங்களில் வெங்காயம் பூண்டு மது அசைவம் போன்றவற்றை பயன்படுத்துவதையும் சாப்பிடுவதையும் நாம் தவிர்க்க வேண்டும்.
4. நவராத்திரி காலங்களில் முடிந்த வரை வீடுகளில் தீய சொற்கள் மற்றும் சண்டைகள் செய்யாமல் இருப்பது அவசியம். அதைவிட முக்கியமாக தீய எண்ணங்கள் நம் மனதில் முற்றிலுமாக இருப்பது கூடாது.
5. நவராத்திரி காலங்களில் ஒரு பொழுதும் வீட்டை இருள் சூழ்ந்து வைத்திருக்கக் கூடாது. கருப்பு அடர் நீலம் ஆகிய நிறங்களில் நவராத்திரி காலங்களில் உடை அணிந்ததை நாம் தவிர்ப்பது நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







