இந்த ஜாதகம் அமைப்பு இருந்தால் மறைந்த பின்பும் அழியாத புகழ் இருக்குமாம்

By Sakthi Raj Oct 23, 2026 01:00 PM GMT
Report

ஒருவர் வாழ்கின்ற பொழுது அவருக்கு பெயர் புகழ் இருப்பது என்பது வேறு. ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே அவர்கள் இறந்தும் பல்லாயிரம் காலம் அவர்களுடைய பெயரும் புகழும் நிலைத்திருக்க கூடிய ஒரு பாக்கியத்தை பெறுகிறார்கள்.

இதனை நாம் ஜாதக ரீதியாகவும் தெரிந்து கொள்ள முடியும். அப்படியாக எந்த ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு அவர்கள் மறைந்த பின்பும் அழியாத புகழ் கிடைக்கக்கூடிய பாக்கியம் பெற்றவர்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

இந்த ஜாதகம் அமைப்பு இருந்தால் மறைந்த பின்பும் அழியாத புகழ் இருக்குமாம் | This Horoscope Yogam Brings Lasting Fame In World

ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் லக்னத்திற்கு 12-ஆம் இடத்தில் சூரியன் நின்று அந்த சூரியனை குரு பார்க்கிறார் என்றால் அந்த ஜாதகருக்கு தான் மறைந்த பின்பும் அழியாத புகழ் மக்கள் மத்தியில் நிறைந்து இருக்கும்.

தடைபட்ட காரியங்கள் தடையின்றி நடக்க செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த பரிகாரம்

தடைபட்ட காரியங்கள் தடையின்றி நடக்க செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த பரிகாரம்

அதேபோல், பூமியில் வாழ்கின்ற காலகட்டங்களில் ஒரு மரியாதையான மற்றும் சமுதாய சிந்தனையோடு அவர் வாழக்கூடியவராக திகழ்ந்திருப்பார்.

இந்த ஜாதகம் அமைப்பு இருந்தால் மறைந்த பின்பும் அழியாத புகழ் இருக்குமாம் | This Horoscope Yogam Brings Lasting Fame In World

இதற்கு உதாரணமாக நாம் காமராஜர் மற்றும் மகாத்மா காந்தியை எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் இருவர் ஜாதகத்திலும் லக்னத்திற்கு 12-ஆம் இடத்தில் சூரியன் இருக்கிறார். ஆக, இவ்வாறான ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு நிச்சயம் இறந்த பின்பும் அவர்களுடைய பெயரை இந்த உலகம் சொல்லிக் கொண்டே இருக்கும்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US